ஷாம்: விஜய்க்கு அண்ணன் ஆனதில் மகிழ்ச்சி

ஷாம்: விஜய்க்கு அண்ணன் ஆனதில் மகிழ்ச்சி

1 mins read
45975a4e-807d-465d-9df3-7de2de637f13
-

'வாரிசு' படத்­தில் நடித்­தது தமது திரை வாழ்க்­கை­யில் மறக்க முடி­யாத இனிய அனு­ப­வம் என்­கி­றார் நடி­கர் ஷாம்.

தமி­ழ­கமே கொண்­டா­டும் விஜய்­யின் எளி­மை­யும் தொழில் ஈடு­பா­டும் மற்­ற­வர்­களை அரவணைத்துச் செல்­லும் குண­மும் தம்மை வெகு­வாக ஆச்சரி­யப்­ப­டுத்­தி­ய­தாக அவர் ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"விஜய் அனு­பவ நடி­கர் என்­பது தெரி­யும். ஆனால் எத்­த­கைய காட்­சி­யாக இருந்­தா­லும் ஒத்திகை ஏதும் பார்க்­கா­மல் முதல் 'டேக்'கிலேயே நடித்து விடு­வார். அத­னால்­தான் இந்த உய­ரத்­தில் இருக்­கி­றார்.

"இப்­ப­டத்­தில் அவ­ரது ரசி­கர்­க­ளுக்­குப் பிடித்­த­மான 'மாஸ்' காட்­சி­கள் அதி­கம் இருக்­கும். விஜய்­யி­டம் நிறைய கற்­றுக்­கொண்­டேன். எவ்­வ­ளவு பெரிய உய­ரத்தை அடைந்­தா­லும் அமை­தி­யாக இருக்கவேண்­டும் என்­பது­தான் அவ­ரி­டம் கற்ற முக்­கி­ய­மான பாடம்," என்­கி­றார் ஷாம்.

தமது ரசிகர்கள் மீது விஜய் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டுள்ளதாகக் குறிப்பிடுபவர், எப்போதும் ரசிகர்கள் குறித்தே அவர் பேசிக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்.

'வாரிசு' படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளார் ஷாம். அவரது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் வலம் வருகின்றன. எனினும் அது குறித்து தம்மால் இப்போது எந்த விவரத்தையும் அளிக்க இயலாது என்கிறார்.

"தற்போது வெங்கட் பிரபு இயக்கிய 'பார்ட்டி' படத்தில் நடித்து இருக்கிறேன். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறேன்.

"விரை­வில் புதிய படம் ஒன்றைத் தயா­ரிக்­க­வும் முடிவு செய்­துள்­ளேன். விஜய் மில்­டன் இயக்­கும் 'கோலி சோடா 3' படத்­தில் முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றேன்," என்கி­றார் ஷாம்.