சூப்பர் ஸ்டார் ரஜினி தற்பொழுது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இந்தப் படத்தில் நடிப்பதாக படக்குழு நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இதுவரை கிடைத்த தகவலின் படி சிவ ராஜ்குமார், மோகன்லால் இருவரும் குண்டர் கும்பல் தலைவர் வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் 'ஜெயிலர்' படம் வெளியாகும்
நாளுக்காக ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

