சமந்தா: காலில் விழுந்தேன்

சமந்தா: காலில் விழுந்தேன்

3 mins read
389930a0-8aed-4878-8e20-c894739cc2de
-

வாழ்க்­கை­யில் பல்­வேறு போராட்­டங்­களை தொடர்ந்து சந்­தித்து வரு­வ­தா­க­வும் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில் சினிமா மீதான தன் காதல் மட்­டும் சிறி­த­ள­வும் மாறா­மல் நிலை­யாக உள்­ளது என்­றும் கூறி­யுள்­ளார் சமந்தா.

'யசோதா' திரைப்­ப­டத்­திற்கு பிறகு நடிகை சமந்­தா­வின் நடிப்­பில் வெளி­யா­கிறது குணசேகர் இயக்கி உள்ள 'சாகுந்­த­லம்'.

இப்­படத்­தின் முன்­னோட்டக் காட்­சித் தொகுப்பு வெளி­யாகி உள்­ளது. இந்­நி­கழ்­வில் கலந்­து­கொண்டு பேசிய அவர், சினி­மாவை தாம் நேசிக்­கும் அள­வுக்கு சினி­மா­வும் தன்னை நேசிக்­கிறது என்­றார்.

"இப்­போது 'சாகுந்­த­லம்' படத்­தின் மூலம் எனக்­கும் சினி­மா­வுக்­கு­மான காதல் மேலும் வள­ரும் என நினைக்­கி­றேன். அண்­மை­யில் இந்­தப் படத்தை முழு­மை­யா­கப் பார்த்­தேன்.

"எனது அனைத்து எதிர்­பார்ப்­பு­களை முழு­மை­யாக நிறை­வேற்­றும் வகை­யில், இயக்­கு­நர் எனக்­குக் கொடுத்த வாக்­கு­று­தியை மிஞ்­சும் வகை­யில் படம் இருந்­தது. இதற்­காக இயக்­கு­ந­ருக்கு நன்றி தெரி­வித்­தேன்.

"இந்­தப் படம் பார்த்த எனக்கு ஏற்­பட்ட உணர்­வு­களை பார்­வை­யா­ளர்­களும் அனு­ப­விப்­பார்­கள்," என்­றார் சமந்தா.

இதை­ய­டுத்து இயக்­கு­நர் குண­சே­க­ர­னின் காலில் விழுந்து ஆசி பெற்று நன்­றி­யும் தெரி­வித்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்­டார்.

எதிர்­வரும் பிப்­ர­வரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கிறது 'சாகுந்­த­லம்' திரைப்படம்.

"இந்­தப் படத்­தின் உண்­மை­யான கதா­நா­ய­கன் என்­றால் அது சமந்தா தான். கதை­யின் நாய­கி­யான சாகுந்­தலா கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கக் கேட்டு பல நடி­கை­களை அணு­கி­னேன். அப்­போது தயா­ரிப்­பா­ளர் நீலிமா தான் சமந்­தாவை பரிந்­துரை செய்­தார். எல்­லா­ரும் எதிர்­பார்த்­த­தை­விட மிகச் சிறப்­பாக நடித்­துள்­ளார்,," என்று விழா மேடையில் இயக்கு­நர் குகணசேகர் கூறி­ய­போது, உணர்­வு­க­ளைக் கட்­டுப்­படுத்த இய­லா­மல் மேடை­யி­லேயே கண்­ணீர்­விட்­டார் சமந்தா.

"சகுந்­த­லை­யாக நடிக்­கும்­போது அந்த கதா­பாத்­தி­ரத்­தின் தன்­மைக்கு ஏற்ப சில முக­பா­வ­னை­களை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது. நடக்­கும்­போது, பேசும்­போது, ஓடும்­போது என ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் அந்த முக­பா­வ­னை­கள் சரி­யாக இருக்க வேவண்­டும். இதற்­காக மிக­வும் மெனக்­கெட்­டேன். அப்­ப­டி­யி­ருந்­தும்­கூட சில சம­யங்­களில் அவ்­வாறு நடிக்க முடி­யா­மல் போனது. இதற்­காக சிறப்­புப் பயிற்­சி­யும் மேற்­கொண்­டேன்.

"இயக்­கு­நர் குண­சே­கர் என்னை இந்­தக் கதா­பாத்­தி­ரத்­துக்கு தேர்ந்­தெ­டுத்­தது என் அதிர்ஷ்­டம். இது உண்­மை­யி­லேயே எனது பாக்­கி­யம்.," என்­றார் சமந்தா.

"இந்­தத் தரு­ணத்­திற்­கா­கத்­தான் பல நாள்­க­ளா­கக் காத்­தி­ருந்­தேன். படம் எதிர்­பார்த்­த­படி வெளி­யாக வேண்­டும் என்­ப­து­தான் அனை­வ­ரின் விருப்­ப­மாக இருக்­கும். ஆனால் அதற்கு முன்­னர் பல பிரச்­சி­னை­கள் எழக்­கூ­டும். அதை­யும் மீறி சில நேரங்­களில் மட்­டும் ஒரு­சில மாயங்­கள் அரங்­கே­றும். அப்­ப­டித்­தான் 'சாகுந்­த­லம்' படத்­துக்­கும் நடந்­தது.

"இந்­திய இலக்­கிய வர­லாற்­றில், சகுந்­த­லா­வின் கதை மறக்க முடி­யாத ஒன்று. அதற்கு திரை­வ­டி­வம் கொடுப்­பது பெரும் சவால். இப்­ப­டிப்­பட்ட படத்­தில் நடித்­த­தற்­கா­கப் பெரு­மைப்­ப­டு­கி­றேன்," என்­றார் சமந்தா.

இந்­நி­கழ்ச்­சி­யின்­போது சமந்தா கண்­ணீர் விட்டு அழு­தது அவ­ரது ரசி­கர்­களை நெகி­ழ­வைத்­துள்­ளது. இதை­ய­டுத்து ஏரா­ள­மா­னோர் அவ­ருக்கு ஆறு­தல் கூறும் வகை­யில் சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டுள்­ள­னர்.

"எதற்­காகவும் நீங்­கள் மனம் தளர்ந்­து­வி­டக்­கூடாது சாம். நாங்­கள் அனை­வ­ருமே உங்­கள் பக்­கம் நிற்­கி­றோம்," என்று ரசி­கர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

முன்­ன­தாக இந்­நி­கழ்ச்­சிக்கு வருகை தந்த சமந்­தா­வுக்கு ரசி­கர்­கள் விசில் அடித்து, பெரும் கைதட்­ட­லு­டன் வர­வேற்பு அளித்­த­னர்.

இதற்­கி­டையே சமந்தா தனது சிகிச்­சைக்­காக தென் கொரியா செல்­லும் திட்­டத்தை தற்­கா­லி­க­மாக ஒதுக்கி வைத்­துள்­ளார் என்­றும் மும்­பை­யி­லேயே தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

நெருக்கமான தோழிகள் இருவர் அருகில் இருந்து அவரைக் கவனித்துக் கொள்கிறார்களாம்.