திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
215c4a0d-06b2-4c5e-b82d-652d1dd61133
-
multi-img1 of 2

 எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதுகுறித்து யாரிடமாவது மனம் விட்டுப் பேசினால் மனப்பாரம் நிச்சயம் குறை யும் என்கிறார் ஷ்ருதி ஹாசன். தமக்கும் மன ரீதியாக சில பிரச்சினை கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதிகமாக உணர்ச்சி வசப்படுவதும் சிறிய விஷயத்துக்கும் பொறுமை இழந்து கோபப்படுவதும் தமது குணாதிசயங்கள் என்று கூறியுள்ளார்.

"முன்பெல்லாம் எனது பிரச்சினைகள் குறித்துப் பேச பயந்தேன். இப்போதும்கூட நான் நினைத்தபடி ஒன்று நடக்கவில்லை என்றால் மன உளைச்சலுக்கு ஆளாகி றேன். எனினும் பலர் மனம்விட்டுப் பேசுவதைக் கண்ட பிறகுதான் என்னிடமும் மாற்றம் ஏற்பட்டது. இசை கூட மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு வழிதான். இப்போ தெல்லாம் எனக்குள்ள இந்த பிரச்சினைகளை மறைக்க நினைப்பது இல்லை. மறைக்கும் போதுதான் இன்னும் அதிகமான நெருக்கடி ஏற்படுகிறது," என்கிறார் ஷ்ருதி.

 தமிழில் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர், அடுத்து தெலுங்கில் அறிமுகமாகிறார். 'கல்யாணம் கமநீயம்' என்ற தலைப்பில் உருவாகி உள்ள அப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இதில் சந்தோஷ் சோபன் நாயகனாக நடிக்க அனில் குமார் இயக்கியுள்ளார். தெலுங்கு ரசிகர்களும் தனக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புவதாகச் சொல்கிறார் பிரியா. தமிழில் தற்போது 'பத்து தல', 'அகிலன்', 'ருத்ரன்', 'பொம்மை', 'இந்தியன் 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

 திகில் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் சோனியா அகர்வால். ஹருண் இயக்கும் இந்தப் படத்தில் சோனியாவின் மகளாக இளம் நாயகி ஸ்ருத்தி வெங்கட் நடிக்கிறார். தற்போது தமக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவதாகச் சொல்கிறார் சோனியா.