அதிகாலை சிறப்புக் காட்சிகள் ரத்து

அதிகாலை சிறப்புக் காட்சிகள் ரத்து

1 mins read
bf3ab0b3-8739-46e6-b4e5-58fb1ea19f57
-

'வாரிசு', 'துணிவு' படங்­க­ளுக்­கான அதி­காலை சிறப்­புக் காட்­சி­க­ளுக்கு அனு­மதி இல்லை என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

மேலும், திரை­ய­ரங்­கு­கள் முன்பு வைக்­கப்­பட்­டுள்ள பிரம்­மாண்ட பதா­கை­க­ளுக்கு பாலா­பி­ஷே­கம் செய்­வ­தற்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஒன்­பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு விஜய்­யும் அஜித்­தும் திரை­யில் மோது­வ­தை­யொட்டி தமிழ் சினிமா ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த எதிர்­பார்ப்­பு­கள் நில­வு­கின்­றன.

இதை­ய­டுத்து தமி­ழ­கம் முழு­வ­தும் இவ்­விரு படங்­க­ளின் சிறப்புக் காட்­சி­கள் அதி­காலை வேளை­யில் திரை­யி­டப்­படும் என்று அறி­விப்பு வெளி­யா­னது. இன்று தொடங்கி 17ஆம் தேதி வரை அதி­காலை 4 மணிக்கு சிறப்புக் காட்சி திரை­யி­டப்­படும் என்ற அறி­விப்­பை­ய­டுத்து திரை­ய­ரங்­கு­களில் இருக்கை முன்­ப­திவு விறு­வி­றுப்­பாக நடந்து வந்­தது. இந்­நி­லை­யில், தமி­ழக அர­சின் திடீர் அறி­விப்­பால் ரசி­கர்­கள் ஏமாற்­றம் அடைந்­துள்­ள­னர்.

திரை­ய­ரங்­கு­களில் அனு­ம­திக்­கப்­பட்ட கட்­ட­ணத்தை மீறி அதி­கம் வசூ­லிக்­கப்­பட்­டால் நட­வ­டிக்கை பாயும் என­வும் தமி­ழக அரசு எச்­ச­ரித்­துள்­ளது.

திரை­ய­ரங்க வளா­கங்­களில் வைக்­கப்­படும் பதா­கை­க­ளுக்கு ரசி­கர்­கள் பாலா­பி­ஷே­கம் செய்­வது, அவற்­றின் மீதேறி நட­ன­மா­டு­வது குறித்து சமூக ஆர்­வ­லர்­கள் தொடர்ந்து கண்­ட­னம் தெரி­வித்து வந்­த­னர். இந்­நி­லை­யில், இது­போன்ற செயல்­க­ளுக்­கும் அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுமா எனத் தெரியவில்லை.