அண்மைக்காலங்களில் நடிகைகள் நடிகர்களைச் சுற்றி வந்து பாடலுக்கும் ஒரு சில காட்சிகளிலும் நடிப்பதைத் தவிர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த நடிகைகளில் நயன்தாரா, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற தமிழ் நடிகைகளைப்போல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்தும் தனி நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்பொழுது இவர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'எமர்ஜென்சி' படத்திலும் பி.வாசு இயக்கும்
'சந்திரமுகி 2' படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் வலைத்தளங்களில் பல சர்ச்சையான கருத்துகளைப் பதிவிடுவதால் ஆபத்து என்பதால், முன்னெச்சரிக்கையாக படப்பிடிப்புக்குச் செல்லும் இடங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் செல்
கிறார்.
'எமர்ஜென்சி' படத்தை அவரே நடித்தும் இயக்கியும் வருகிறார். கங்கனாவின் 'தலைவி' படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்தான் இசை அமைத்து வருகிறார்.
"இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால் பலர் இந்த 'எமர்ஜென்சி' படத்திற்குப் பாடல்களே தேவை இல்லை என்று கூறி வருகிறார்கள். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நான் பாடல்களை மிகவும் விரும்பு பவள். இன்னும் சொல்லப் போனால் பத்து நிமிடத்திற்கு ஓடக்கூடிய பாடலாக இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்," என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

