'அவர் உங்களுடையவர்'

'அவர் உங்களுடையவர்'

1 mins read
aa1bdacc-829d-484d-9592-94d83ef7dce9
-

பூங்­கு­ழலி என்­றாலே சட்­டென நினை­வுக்கு வரு­ப­வர் ஐஸ்­வர்யா லட்­சு­மி­தான். 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் அவர் நடித்த கதா­பாத்­தி­ரம் பெரும் வர­வேற்­பைப் பெற்று இவ­ருக்­கான ஓர் அடை­யா­ளத்­தைக் கொடுத்­தது.

இவர் அர்­ஜுன் தாஸு­டன் நெருக்­க­மாக இருக்­கும் புகைப்­ப­டத்­தைத் தனது சமூக வலைத்­த­ளத்­தில் 'இதய' குறி­யீ­ட்டு­டன் நேற்று முன்­தி­னம் பகிர்ந்­தி­ருந்­தார். அதற்கு இரு­வ­ரின் ரசி­கர்­களும் 'காத­லர்­க­ளுக்கு வாழ்த்­து­கள்' என பதி­விட்டு வந்­த­னர்.

இந்­நி­லை­யில், ஐஸ்­வர்யா லட்­சுமி, தனது இணை­யப் பக்­கத்­தில் முந்­தைய பதி­விற்கு விளக்­க­ம் அளித்து பதிவு ஒன்றை பகிர்ந்­துள்­ளார். அதில், "நண்­பர்­களே! எனது கடைசி பதிவு இவ்­வ­ளவு விரை­வில்

அதி­க­மாக பகி­ரப்­படும் என்று எதிர்­பார்க்­க­வில்லை. நாங்­கள் சந்­திக்க நேர்ந்­தது, அத­னால் ஒரு படத்தை எடுத்துப்

பதி­விட்­டேன். நாங்­கள் இரு­வ­ரும் நண்­பர்­கள்­தான்," என்று பதி­விட்­டுள்­ளார்.

மேலும் தனக்கு குறுஞ்­செய்தி அனுப்­பும் அனைத்து அர்­ஜூன் தாஸ் ரசி­கர்­க­ளுக்­கும் "அவர் உங்­க­ளு­டை­ய­வர்," என்று குறுஞ்­செய்தி அனுப்பி வரு­கி­றார்.

இவர் நடிப்பில் வெளி­யான 'கட்டா குஸ்தி' படம்

பல­ரின்

கவ­னத்தை ஈர்த்து வருகிறது.