இயக்குநர்கள் ஸ்பீல்பெர்க், ராஜமௌலி சந்திப்பு

இயக்குநர்கள் ஸ்பீல்பெர்க், ராஜமௌலி சந்திப்பு

1 mins read
63a41cec-3e31-4a86-912f-577d6fc696f6
-

அமெ­ரிக்கா சென்­றுள்ள இயக்­கு­நர் ராஜ­மௌலி அங்கு ஹாலி­வுட் இயக்­கு­நர் ஸ்டீ­வன் ஸ்பீல்­பெர்க்கை சந்­தித்­துப் பேசி­யுள்­ளார்.

அந்­தச் சந்­திப்பு குறித்து அவர் தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்ளார். அதில், "நான் இப்­போது கடவுளைப் பார்த்­தேன்," எனக் குறிப்­பிட்­டுள்­ளார் ராஜ­மௌலி.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்கா­வில் நடை­பெற்ற விருது விழா­வில் பங்­கேற்க சென்ற ராஜ­மௌ­லி­யும் 'ஆர்­ஆர்­ஆர்' படக் குழு­வி­ன­ரும் ஸ்பீல்­பெர்க்கைச் சந்­தித்­துள்­ள­னர். ஸ்பீல்­பெர்க்கை நேரில் சந்தித்ததும் தன் கன்­னத்­தில் கை வைத்து ராஜ­மௌலி வியப்பை வெளிப்­ப­டுத்துவது போன்ற படம் வெளி­யாகி உள்ளது.

இசை­ய­மைப்­பா­ளர் கீர­வாணி தமது சமூக ஊட­கப் பதி­வில், 'திரைப்­ப­டங்­க­ளின் கட­வுளைச் சந்­திக்­கும் பாக்­கி­யம் கிடைத்­தது' என்று தெரி­வித்­துள்­ளார்.

"அவ­ரது படைப்­பு­கள் மிக­வும் பிடிக்­கும் என்­றேன். அவரோ, 'நாட்டு நாட்டு' பாடல் தமக்கு மிகவும் பிடிக்­கும் என்­றார். என்­னால் நம்­பவே முடி­ய­வில்லை," என கீர­வாணி குறிப்­பிட்­டுள்­ளார்.