ஐயப்ப பக்தர்கள் சிலர் கூட்டணி அமைத்து பக்திப்படம் தயாரித்துள்ளனர்.
'ஸ்ரீ சபரி ஐயப்பன்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள அப்படம் ஐயப்பன் மகிமைகளை கூறும் படைப்பாக உருவாகி உள்ளது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி உள்ள ராஜா தேசிங்கு முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இதில் நாயகனாக விஜயபிரசாத், நாயகியாக பூஜா நாகர் நடித்துள்ளனர். கஞ்சா கருப்பு, சோனா, சாம்ஸ், முத்துக்காளை, ராஜேந்திரநாத், வடிவேல் கணேஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாபு அரவிந்த் இசையமைத்துள்ளார்.
"தமிழகம் கடவுள்கள் நடமாடிய புண்ணியப் பூமி. எனவே ஆன்மிக படைப்புகளுக்கு இங்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. இதுபோன்ற படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவர வேண்டும்," என்று இயக்குநர் பேரரசு இப்படம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
'ஸ்ரீ சபரி ஐயப்பன்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி.

