நகைச்சுவைக்குப் பஞ்சம்

நகைச்சுவைக்குப் பஞ்சம்

2 mins read
d71a95b3-f668-4510-88dc-06611d38127e
-

தொழில்­நுட்ப நுணுக்­கங்­கள், வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­கள், திறமை வாய்ந்த கலை­ஞர்­கள், வசூல் சாதனை படைக்­கும் திரைப்­ப­டங்­கள் என தமிழ்த் திரை­யு­ல­கம் நன்கு முன்­னேற்­றம் கண்­டுள்­ளது. காசு கொடுத்­துப் படம் பார்க்­கும் ரசி­கர்­களும் தர­மான படைப்­பு­களை மன­தா­ரப் பாராட்­டு­கி­றார்­கள்.

"ஆனால் இப்­ப­டிப் பல நிறை­கள் இருந்­தா­லும் ரசி­கர்­களுக்கு சில மனக்­கு­றை­களும் இருக்­கவே செய்­கின்­றன. அவற்­றுள் முக்­கி­ய­மான மனக்­குறை, போது­மான நகைச்­சுவைக் கலை­ஞர்­கள் இல்லை என்­ப­து­தான்," என்று கோடம்­பாக்­கப் பிர­மு­கர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

தமிழ் சினி­மா­வின் தொடக்கக் காலம் முதல் ஒரு திரைப்­ப­டத்­தின் வெற்­றிக்கு நகைச்­சுவை நடி­கர்­களின் பங்­க­ளிப்பு பெரி­தும் கைகொ­டுத்து வந்­தி­ருக்­கிறது.

என்.எஸ்.கிருஷ்­ணன், டி.ஏ.மது­ரம், தங்­க­வேலு, வி.கே.ராம­சாமி, மனோ­ரமா என்று தொடங்கி, கவுண்­ட­மணி, செந்­தில், கோவை சரளா, விவேக், வடி­வேல், சந்தானம் என்று அண்­மைய காலம் வரை பலர் தங்­க­ளு­டைய நகைச்­சு­வை­யால் ரசி­கர்­களைக் கவலை மறந்து சிரிக்­க­வும் சிந்­திக்­க­வும் வைத்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், வடி­வேலு, சந்­தா­னம், சூரி என நகைச்­சுவை நடி­கர்­கள் கதா­நா­ய­கர்­க­ளா­க­வும் குணச்­சித்­திர நடிகர்­களா­க­வும் மாறி­விட்­ட­னர்.

"சில படங்­களில் கதைக்­க­ளம் நன்­றாக இல்லை என்­றா­லும் நகைச்­சுவைக்­கா­கவே திரை­ய­ரங்­கு­களில் நூறு நாள்­க­ளைக் கடந்து வசூல் கண்­டுள்­ளன.

"இதற்கு ஏரா­ள­மான படங்­களை உதா­ர­ண­மாகக் கூற முடி­யும். பல படங்­களில் நகைச்­சு­வைக் காட்­சி­கள் தனித்­தொ­குப்பு போல் இடம்­பெற்­றி­ருக்­கும். அவற்­றுக்­கும் பலத்த வர­வேற்பு கிடைத்து வந்­தது.

"இயக்­கு­நர்­களும் நகைச்­சுவை நடி­கர்­களை மன­தில் வைத்து கதை எழு­தி­யது உண்டு. ஆனால், இப்­போது நிலைமை மாறிவிட்­டது. வடி­வேல் கதா­நா­ய­கனாகி விட்­டார். அவ­ருக்­குப் பிறகு நகைச்­சுவை நடி­க­ராக கொடி­கட்­டிப் பறந்த சந்­தா­ன­மும் இப்­போது கதா­நா­ய­கன்.

"தொடர்ந்து வந்த சூரி, யோகி­பா­பு­வும் கதா­நா­யகர்­களாக நடித்து வரு­கின்­ற­னர். நகைச்­சுவை பாத்­தி­ரங்­களை­விட, கதா­நா­ய­கர்­க­ளாக நடிப்­ப­தில்­தான் இவர்­களுக்கு ஆர்­வம் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"இதில் நாம் வியப்­ப­தற்கு ஒன்­றும் இல்லை. நகைச்­சுவை பாத்­தி­ரங்­களில் நடிக்­கும்­போது சில நாள்­கள்­தான் படப்­பி­டிப்பு இருக்­கும். ஊதி­ய­மும் குறை­வா­கத்­தான் கிடைக்­கும்.

"ஆனால் நாய­கனாக உரு­வெ­டுத்த பிறகு பெரிய அள­வில் புக­ழும் கோடிக்­க­ணக்­கில் சம்­ப­ள­மும் கிடைக்­கின்­றன. சண்­டைக்­காட்சி, காதல் காட்சி, பாடல்­கள் என்று அனைத்து வகை­யி­லும் முக்­கி­யத்­து­வம் கிடைக்­கும். இவற்­றை­யெல்­லாம் கைவிட யாருக்­குத்­தான் மனசு வரும்?," என்று கோடம்­பாக்­கப் பிர­மு­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

சில படங்­களில் நடித்து முடித்த உட­னேயே நகைச்­சுவை நடி­கர்­களுக்கு கதா­நா­ய­க­னா­கும் வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன. அவர்­களும் தயக்­க­மின்றி அவற்றை ஏற்­றுக்­கொள்­கி­றார்­கள்.

இத­னால், வடி­வேலு, சந்­தா­னம், சூரியை நம்­பி­யி­ருந்த, அவர்­க­ளின் குழு­வில் இடம்­பெற்­றி­ருந்த நகைச்­சுவை துணை நடி­கர்­க­ளுக்­குப் போது­மான வாய்ப்­பு­கள் இன்றி வீட்டில் முடங்கி உள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இந்­நி­லை­யில், சந்­தா­னம் மீண்­டும் நகைச்­சு­வைக் கதா­பாத்­தி­ரங்­களை ஏற்க முடிவு செய்­தி­ருப்­ப­தாக ஒரு தகவல் வெளி­யாகி உள்­ளது. இத­னால் அவ­ரது ரசி­கர்­க­ளுக்கு சிறிய வருத்­தம் இருந்­தா­லும், அவ­ரது நகைச்­சுவை ஒட்­டு­மொத்த கோடம்­பாக்க ரசி­கர்­க­ளை­யும் மகிழ்­விக்­கும் என்­பதை நினைத்து ஆறு­தல் அடைந்­துள்­ள­னர்.

அஜித்­தின் அடுத்த படத்­தில் நடிக்க சந்தானத்தை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­தா­க­வும் இதற்­காக அவ­ருக்கு சில கோடி ரூபாய் சம்­ப­ள­மா­கப் பேசப்­பட்­டுள்­ளது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

, :

  