'குந்தவையாக என்னை ஏற்றுக்கொண்டார்கள்'

'குந்தவையாக என்னை ஏற்றுக்கொண்டார்கள்'

2 mins read
7fbaf437-48ed-4b3d-a55d-6aa0c5ac29bd
-

அண்­மை­யில் வெளி­யான 'ராங்கி' படத்­தில் நிரு­ப­ராக நடித்து, சண்­டைக் காட்­சி­க­ளி­லும் அசத்தி இருந்தார் திரிஷா. பார்க்க இள­மை துள்­ளும் அழ­கி­யாக இருப்­ப­தால் காதல் காட்­சி­களில் மட்­டும் நடிப்­பேன் என நினைக்­கா­தீர்­கள். நான் சண்­டைக் காட்­சி­க­ளி­லும் நன்­றாக நடிப்­பேன் என்று நிரூ­பித்த இவர் மனம் திறந்து பேசி­யுள்­ளார்.

'ராங்கி' படம், வெளி­நாட்டுப் படப்­பி­டிப்பு பற்றி

"இயக்­கு­நர் முரு­க­தாஸ் கதை எழுத,

'எங்­கே­யும் எப்­போ­தும்' பட இயக்­கு­நர் சர­வ­ணன் இயக்­கிய படம் 'ராங்கி'. இதில் நிரு­ப­ராக நடித்­துள்­ளேன். படப்­பி­டிப்பு லிபியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடு­களில் நடை­பெற்­றது.

பொன்­னி­யின் செல்­வன்

'குந்­தவை டூ ராங்கி'

'ராங்கி' படத்­தில் குந்­த­வைக்கு நேர் எதி­ரான கதா­பாத்­தி­ரம். நிரு­பர்­கள் எப்­போ­தும் ஒப்­ப­னை­யின்றி எளி­மை­யாக இருப்­பார்­கள். நானும் முடிந்­த­வரை அது­போல் நடித்­தி­ருக்­கி­றேன். முக­நூ­லில் கதை தொடங்கி, ஒரு பெண் சிக்­க­லில் சிக்­கும் கதை­யாக உரு­வெ­டுத்து இருக்­கிறது இந்­தக் கதை. சண்­டைக் காட்சி­களில் நானே நடித்து இருக்­

கி­றேன்.

நாய­கன் பார்க்க புது­மு­க­மாக இருக்­கி­றாரே!

இயக்­கு­நர் சர­வ­ணன் உஸ்­பெ­கிஸ்­தா­னில் ஒரு­வரை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். அவ­ரின் பெயர் ஆலிவ். மிக­வும் சிறப்­பாக நடித்­

தி­ருக்­கி­றார். படம் முழு­வ­தும் துறு­து­று­வென்று இருப்­பார். அனை­வ­ருக்­கும் அவ­ரின் நடிப்பு பிடிக்­கும்.

படம் வெளி­யா­ன­தும் உங்­கள் மன­நிலை?

ஒவ்­வொரு பட­மும் வெளி­யா­கும்­போது மக்­கள் என்ன சொல்­வார்­கள் என்ற எதிர்­பார்ப்பு இருக்­கும். 'ராங்கி' என்னை மையப்­ப­டுத்தி எடுத்த படம் என்­ப­தால் எது நடந்­தா­லும் நான்­தான் அதற்குப் பொறுப்பு என்­ப­தால் படம் வெளி­யா­கும்­போது பதற்­ற­மாக இருந்­தது.

உங்­களை இயக்­கிய இயக்­கு­நர்­கள்?

என்னை நல்ல கதை­களில், நல்ல கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க வைத்த மணி­ரத்­னம், கவு­தம் மேனன், பிரேம்,

சர­வ­ணன் அனை­வ­ருக்­கும் நன்றி. நல்ல கதை­யாக இருந்­தால் புது இயக்­கு­நர்­கள் இயக்­கத்­தி­லும் நடிக்கத் தயார். ஒரு படம் முழு­வ­தும் ரஜி­னி­யு­டன் நடிக்­க­வேண்­டும் என்­பது என்­னு­டைய நீண்ட நாள் ஆசை.

எங்கு சென்­றா­லும் 'குந்­தவை'யாகப் பார்ப்­பது?

இயக்­கு­நர் மணி­ரத்­னத்­திற்கு நன்றி சொல்­ல­வேண்­டும். கல்கி நாவல் படித்­த­வர்­க­ளுக்குக் குந்­தவை மீது பெரிய ஈர்ப்பு இருந்­தி­ருக்­கிறது. அந்தக் கதா­பாத்­தி­ரத்­திற்கு நான் சரி­யாக இருப்­பேனா என்று பல­ரும் பயந்­த­னர். ஆனால் இன்று குந்­தவை என்­றால் நான்­தான் என மக்­கள் கூறு­வ­தில் மகிழ்ச்சி.

திரி­ஷா­வுக்கு 2022 எப்­படி?

சென்ற ஆண்டு மிக­வும் நன்­றாக இருந்­தது. 'பான்' இந்­தியா பட­மாக 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் குந்­த­வை­யாக வாழ்ந்­தேன். இனி இது­போன்ற கதா­பாத்­தி­ரம் கிடைக்­குமா என்­பது ஐயம். அந்­தப் படம் எனக்கு நல்ல பெயர் வாங்­கிக் கொடுத்­தது. 'ராங்கி' படத்­தி­லும் என்­னு­டைய நடிப்பு மக்­க­ளுக்குப் பிடிக்­கும் என்று நினைக்­கி­றேன்," என்­றார் 'ராங்கி' நாயகி திரிஷா.