மாதங்கி இளங்கோவன்
சிங்கப்பூர் திரையரங்குகளில் 'வாரிசு' திரைப்படம் புதன்
கிழமை (ஜனவரி 11ஆம் தேதி) வெளியிடப்பட்டது. சிங்கப்பூரர்கள் கார்னிவல் திரையரங்கில் இரவு 11.55 மணிக்கு படத்தின் முதல் காட்சியைக் கொண்டாட்ட உணர்வோடு காண திரையரங்கிற்குச் சென்றனர்.
வியாழக்கிழமை மாலை நேரத்தில் அங் மோ கியோவின் கேத்தே திரையரங்கில் 'வாரிசு' படத்தைப் பார்க்கச் சென்றேன்.
உணர்ச்சிபூர்வமான காட்சிகள், விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள், துடிப்பான பாடல்கள் என பல அம்சங்களைக் கொண்டிருந்தது 'வாரிசு'.
குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் புரிந்துணர்வு குறித்த சவால்களையும்
கண்முன்னே படம்பிடித்துக் காட்டியது போல் இருந்தது.
இரண்டாம் பாதி முதல் பாதியைவிட மெதுவாக நகர்ந்தது. திரைக்கதை புதுமையாக இல்லாததும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் போதுமான முக்கியத்துவம் கொடுக்காததும் படத்திற்கு விறுவிறுப்பு குறைந்ததுபோல் இருந்தது.
இருப்பினும், தமனின் இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்தது.
மலேசியாவைச் சேர்ந்த 'ஹேவொக் பிரதர்ஸ்' பாடகர்
களின் 'ராப்' பாடலுக்கு விஜய் நடந்து வரும் காட்சியைப் பார்த்தபோது ரசிகர்கள்
உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பி, கூச்சலிட்டனர்.
விஜய், 'கில்லி' படத்தில் நடித்தது போன்ற குறும்புத்தனம், நகைச்சுவை, சுறுசுறுப்பு ஆகியவற்றை 'வாரிசு' படத்தில் பார்க்க முடிந்தது. தொடக்கம் முதல் இறுதி வரை விஜய்யின் நடிப்பால் படம் இந்த அளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பத்தினர் ஒன்றுகூடி பார்க்கக்கூடிய படமாக இருந்தது.
சரவணன் குருசாமி, 31

