துணிவுடன் அஜித்

மாதங்கி இளங்­கோ­வன்

 

ரசி­கர்­க­ளின் கைதட்­டல்­கள், விசில் சத்­தம், ஆட்­டம் என்று அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்­

ப­டத்­திற்­கான ஆர­வா­ரத்­திற்­குப் பஞ்­ச­மில்லை.

கார்­னி­வல் திரை­ய­ரங்­கில் புதன்­கி­ழமை (ஜன­வரி 11ஆம் தேதி) திரைப்­ப­டத்­தின் முதல் காட்சி அதி­காலை 3.30 மணிக்­குத் திரை­யி­டப்­பட்­டது. அந்த நேரத்­தி­லும் ஆயி­ரம் பேர் படத்­தைப் பார்க்க வந்­தி­ருந்­த­னர்.

புதன்­கி­ழமை மாலை 7.30 மணி காட்­சிக்­குச் சென்­றேன். அஜித்­தின் நடை, உடை, பாவனை அனைத்­தும் இப்­ப­டத்­தில்

அவ­ரு­டைய வய­திற்­கேற்ப இருந்­த­தோடு வில்­லன் கதா­பாத்­தி­ரத்தை பிர­தி­ப­லிப்­ப­தில் திற­மை­யா­ன­வர் என்று நிரூ­பித்­தி­ருந்­தார்.

படம் ‘பீஸ்ட்’, ‘விக்­ரம்’ ஆகிய திரைப்­ப­டங்­களில் உள்ள சில காட்­சி­க­ளின் சாய­லில் இருந்­தது. இருப்­பி­னும் திரைப்­ப­டத்­தில் இணைத்­தி­ருந்த கருத்­து­களும் திருப்­பு­மு­னை­களும் புதுமையான­தாக இருந்­தன.

ஜிப்­ரான் இசை­ய­மைத்து,

அனி­ருத் பாடி­யி­ருந்த ‘சில்லா சில்லா’ பாடல் ஒளி­ப­ரப்­பா­ன­போது ரசி­கர்­கள் சிலர் குதூ­க­லத்­தில் நட­ன­மா­டி­னர். உள்­ளூர் இசை­

ய­மைப்­பா­ளர் ஷபிர் இந்­தப் படத்­தின் ‘கேங்ஸ்டா’ என்ற பாடலை எழுதி, பாடி­யுள்­ளார்.

பொது­மக்­க­ளின் அறி­யாமை, நிறு­வ­னங்­க­ளின் சுய­ந­லம் போன்ற கருத்­து­கள் திரைப்­ப­டத்­தில் இடம்­பெற்­றன.

சிந்­திக்க வைக்­கும் கருத்­து­கள், நகைச்­சுவை, சண்­டைக் காட்­சி­கள் இருப்­ப­தால் ‘துணிவு’ அஜித்­தின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு விருந்­தாக அமை­யும் என்­ப­தில் எந்த ஐய­மு­மில்லை.

‘துணிவு’ நான் எதிர்பார்த்ததுபோல் இருந்தது. கதையோட்டத்தில் இருந்த திருப்பங்கள் என்னை இருக்கையின் விளிம்பில் அமர வைத்து இருந்தது. மேலும் சண்டைக் காட்சிகளும் தத்ரூபமாக இருந்தன.

விக்னேஷ் கார்த்திகேசன், 24

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!