'அதிர்ஷ்டம்தான் காரணம்'

'அதிர்ஷ்டம்தான் காரணம்'

3 mins read
e61cf42a-e68d-4463-8272-6aff4beb9d73
-

தென்­னிந்­தி­யா­வில் தன்­னை­விட அழ­கான, திற­மை­யான கதா­நா­ய­கி­கள் பலர் உள்­ள­தா­கச் சொல்­கி­றார் ராஷ்­மிகா மந்­தனா.

எனி­னும் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னது முதல் தனக்கு அனைத்து மொழி­களில் நடிக்க நல்ல வாய்ப்­பு­கள் தேடி வரு­வ­தற்கு அதிர்ஷ்­டம்­தான் கார­ணம் என்று அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ராஷ்­மிகா திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி சுமார் ஆறு ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. பொறுமை, இரக்­கம், தன்­ன­டக்­கம் என எத்­த­னையோ விஷ­யங்­களை சினிமா உல­கம் தமக்­குக் கற்­றுக்­கொ­டுத்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"என்­னு­டைய உழைப்பு, எனக்கு கிடைக்­கும் வாய்ப்­பு­கள், எனது இயக்­கு­நர்­கள், தயா­ரிப்­பா­ளர்­கள், என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ரசி­கர்­கள், எல்­லா­வற்­றுக்­கும் மேலாக கட­வு­ளின் ஆசிர்­வா­தம் ஆகி­ய­வை­தான் எனது வளர்ச்­சிக்­கான முக்­கி­யக் கார­ணங்­கள்.

"ரசி­கர் கூட்­டம் என்னை எவ்­வாறு பார்க்க வேண்­டும் என்று விரும்­பி­யதோ, அது­தான் இப்­போது நடந்து கொண்­டி­ருக்­கிறது.

"என்­னைச் சுற்றி பல திற­மை­சா­லி­கள் உள்­ள­னர். அவர்­கள் மேற்­கொள்­ளும் அனைத்து முயற்­சி­க­ளை­யும் நான் மதிக்­கி­றேன்.

"ஒரு நடி­கை­யாக தின­மும் ஏதா­வது ஒரு புதிய விஷ­யத்தை கற்­றுக்­கொள்­கி­றேன். என்­னு­டன் இணைந்து பணி­யாற்­றும் அனை­வ­ரும் அளித்து வரும் ஒத்­து­ழைப்பு தான் இதற்­குக் கார­ணம்," என்­கி­றார் ராஷ்­மிகா.

'வாரிசு' படத்­தின் வசூல் குறித்து பல்­வேறு தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன. இத­னால் மகிழ்ச்சி அடைந்­துள்ள ராஷ்­மிகா தரப்பு, தமி­ழில் புது வாய்ப்­பு­களை ஏற்­றுக்­கொள்­வ­தில் அவ­ச­ரம் காட்­ட­வில்லை.

திரை­யு­ல­கம் மூலம் கிடைத்­துள்ள புக­ழும் பண­மும் மகிழ்ச்சி அளிக்­கும் அதே வேளை­யில், தனது தனிப்­பட்ட விருப்­பங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­வதை உணர்ந்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார். எனி­னும், திரை­யு­ல­கில் இருப்­ப­வர்­க­ளால் இதை தவிர்க்க இய­லாது என்­பதை தான் புரிந்து கொண்­டி­ருப்­ப­தா­க­வும் கூறு­கி­றார்.

"இந்­தத் தொழி­லில் இருப்­ப­வர்­க­ளுக்கு இது தவிர்க்க முடி­யாத ஒன்று. நானும் இதற்கு விதி­வி­லக்கு அல்ல.

"நான் எங்கு சென்­றா­லும் ரசி­கர்­கள் என்னை ஆத­ரிக்­கும்­போது ஏற்­படும் மகிழ்ச்­சிக்கு அளவே இல்லை. ஏனெ­னில் நான் இதைத்­தானே எதிர்­பார்த்­தேன்.

"எந்த உற­வுமே இல்­லாத என் மீது, ரசி­கர்­கள் காட்­டும் அன்பை மதிக்­கி­றேன். இந்த அன்­புத் தொல்­லையை ஆனந்­த­மாக அனு­ப­விக்­கி­றேன்," என்­கி­றார் ராஷ்­மிகா.

தற்­போது இந்­திப் படங்­களில் நடித்து வரு­ப­வர், தனக்­குத் தெரி­யாத மொழி­க­ளைக் கற்­றுக்­கொள்­வ­தில் ஆர்­வம் காட்டி வரு­கி­றார்.

பல மொழி­க­ளைக் கற்­றுத் தேற வேண்­டும் என்­பது தமது நீண்ட நாள் விருப்­பம் என்­கி­றார்.

"என் படங்­கள் மூலம், என் குரல் மூலம் ரசி­கர்­க­ளு­டன் நெருக்­க­மாக இருக்க வேண்­டும் என்­ப­து­தான் எனது ஆசை.

"என்­னால் முடிந்த வரை, உலக அள­வில் உள்ள ரசி­கர்­கள் மன­தில் இடம் பிடிக்க முயற்­சி­கள் செய்துகொண்டே இருப்­பேன். அதற்­காக மேலும் பல மொழி­களை கற்­றுக் கொள்­வேன்," என்­கி­றார் ராஷ்­மிகா.

அண்­மைக் கால­மாக கன்­ன­டத் திரை­யு­ல­கில் ராஷ்­மி­கா­வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரு­கிறது.

இது­கு­றித்து தாம் பல­முறை விளக்­கம் அளித்த பிறகு சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்­பு­வதை தாம் அறவே விரும்­ப­வில்லை என்­கி­றார்.

"எனக்கு முதன்­மு­த­லில் கன்­ன­டத் திரை­யு­ல­கம்­தான் வாய்ப்பு அளித்­தது. கன்­னட சினிமா மட்­டு­மல்ல, தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழி சினி­மா­வை­யும் நான் குறைத்து மதிப்­பிட மாட்­டேன்.

"அனைத்து மொழி ரசி­கர்­களும் எனக்கு ஆத­ரவு அளித்­த­தால்­தான், நான் இந்த அள­விற்கு வளர்ந்து இருக்­கி­றேன்.

"கன்­ன­டத்­தில் தொடங்கி இந்­தி­யா­வில் உள்ள அனைத்து மொழி ரசி­கர்­க­ளுக்­கும் நான் நன்­றிக்­க­டன் பட்­டி­ருக்­கி­றேன்.

நடி­கர்-நடி­கை­கள், இயக்­கு­னர்­கள் யாராக இருந்­தா­லும் சரி, அவர்­கள் வளர்ந்து பெரிய நிலையை எட்­டு­வ­தற்கு ரசி­கர்­கள்­தான் அடித்­த­ள­மி­டு­கி­றார்­கள்," என்­கி­றார் ராஷ்­மிகா மந்­தனா.