இதுவரை குடும்பப் பாங்கான கதாபாத்தி ரங்களில் நடித்து வந்த அஞ்சலி நாயர் கவர்ச்சிக் கதாபாத்தி ரங்களிலும் நடிக்கத் தயார் என்கிறார்.
'நெடுநல்வாடை', 'டாணாக்காரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
எனினும் விமர்சன ரீதியிலான பாராட்டுகள் மட்டுமே ஒரு நாயகியின் வெற்றிக்கு போதுமானதல்ல என்கிறார் அஞ்சலி.
"ரசிகர்கள் நம்மிடம் இருந்து எதையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவகாசம் தேவைப்படுகிறது. எனக்கும் அந்தப் புரிதல் ஏற்பட்டுள்ளது," என்று சொல்லும் அஞ்சலி நாயர், அண்மையில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சிப் படங்களையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பார்த்த ரசிகர்கள் பலர், கவர்ச்சியிலும் அவர் அசத்துவதாகப் பாராட்டி உள்ளனர்.
இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் ரம்யா பாண்டியன். இதில் கதாநாயகனாக பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிக்கிறார். இதற்கு முன்பு தேன் என்ற படத்தை இயக்கியுள்ளார் கணேஷ் விநாயக். இந்நிலையில், அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 9ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இது கடந்த 1996ஆம் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம்.
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் அப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பாம்.
இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயோத்தி'. சசிகுமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அஜித்தின் வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலா, தமக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

