அண்மையில் வெளியீடு கண்ட 'துணிவு', 'வாரிசு' ஆகிய இரு படங்களுமே வசூல் ரீதியில் சாதித்து வருகின்றன.
வெளியீடு கண்ட ஐந்து நாள்களில் ஏதாவது ஒரு படம் நூறு கோடி ரூபாய் வசூலைக் கண்டிருக்கும் என ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எனினும் செலவைக் கடந்து எத்தனை கோடி லாபம் கிடைத்தது என்பதைப் பொறுத்தே எந்தப் படத்துக்கு முதலிடம் என்பது தெரியவரும் என்கிறார்கள் திரையுலக விமர்சகர்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

