உலகம் சுற்றும் நாயகிகள்

உலகம் சுற்றும் நாயகிகள்

3 mins read
39058649-04ae-4dc9-bd49-3a5af523d069
-

கொரோனா நெருக்­க­டி­யால் திரை­யு­ல­கம் முடங்­கிக் கிடந்­ததை அடுத்து வெளி­நாட்­டுப் படப்­பி­டிப்­பு­கள் அதிக எண்­ணிக்­கை­யில் நடக்­க­வில்லை.

திரை­யு­ல­கத்­தி­னர் பணி நிமித்­த­மா­கவோ, விடு­மு­றைக்­கா­கவோ வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வ­தும் குறைந்­து­போ­னது.

இப்­போது நிலைமை மாறி­விட்­டதை அடுத்து, திரை நட்­சத்­தி­ரங்­கள் பலர் புத்­தாண்டு பிறப்பை ஒட்டி விடு­மு­றைக்­காக பல்­வேறு நாடு­களை வலம் வரு­கின்­ற­னர். மேலும் வெளி­நா­டு­களில் படப்­பி­டிப்பை நடத்­த­வும் பல்­வேறு படக்­கு­ழு­வி­னர் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

நடிகை ஹன்­சிகா தேனி­ல­வுக்­காக சில நாடு­க­ளைச் சுற்றி வந்­துள்­ளார். அப்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை அவர் சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், அவர் நடிக்­கும் புதுப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு ஐரோப்பா வில் நடை­பெற உள்­ள­தாம். அதற்­கான இடங்­க­ளைத் தேர்வு செய்­தது ஹன்­சி­கா­தான் என்­றும் படப்­பி­டிப்­புக்­கான சில ஏற்­பா­டு­க­ளை­யும் அவரே முன்­னின்று கவ­னித்து வரு­வ­தா­க­வும் தெரி­கிறது.

அவ­ரது இந்த ஈடு­பா­டும் அக்­க­றை­யும் திரை­யு­ல­கத்­தி­ன­ரின் பாராட்டு ­க­ளைப் பெற்­றுத் தந்­துள்­ளது.

இயக்­கு­நர் சங்­கர் வெளி­நா­டு­க­ளி­லும் தனது படத்­துக்­கான படப்­பி­டிப்பை பிரம் மாண்­ட­மா­கத்­தான் நடத்­து­வார்.

அவ­ரது இயக்­கத்­தில் உரு­வாகி வரும் தெலுங்­குப் படத்­துக்­கான பாடல் காட்சி ஒன்றை இந்­தி­யா­வி­லேயே பல இடங்­களில் பல கோடி செல­வில் பட­மாக்கி உள்­ளார்.

இந்­நி­லை­யில், அதே படத்­துக்­கான மற்­றொரு பாடலை வெளி­நா­டு­களில் பட­மாக்க விரும்­பு­கி­றா­ராம். இதற்­கும் சில கோடி­கள் செல­வா­கும் என்ற போதி­லும், தயா­ரிப்­பா­ளர் சம்­ம­தம் தெரி வித்­ததை அடுத்து ஏற்­பாடு கள் தொடங்கி உள்­ளன.

இதே­போல், சங்­கர் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'இந்­தி­யன் 2' படப்­பி­டிப்­பும் வெளி­நாட்­டில் நடை­பெற உள்­ள­தா­கத் தக­வல்.

விஜய், அஜித் அடுத்து நடிக்­கும் படங்­க­ளுக்­கான படப்­பி­டிப்­பு­கள் வெளி­நா­டு­களில் நடக்க இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. குறிப்­பாக பாடல் காட்­சி­களை வித்­தி­யா­ச­மான இடங்­களில் பட­மாக்க உள்­ள­ன­ராம்.

இதற்­கி­டையே தனுஷ், சிம்பு, கார்த்தி, சிவ­கார்த்­தி­கே­யன் உள்­ளிட்ட முன்­னணி நாய­கர்­களும் வெளி­நாட்­டுப் படப்­பி­டிப்­பில் ஆர்­வம் காட்­டத் தொடங்கி உள்­ள­னர். எனி­னும், இதன் கார­ண­மாக படத்­தின் மொத்­தச் செலவு அதி­க­ரித்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தில் கவ­னம் செலுத்­து­கின்­ற­னர்.

இவர்­களில் சிலர் மலே­சியா, தாய்­லாந்து உள்­ளிட்ட தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் படப்­பி­டிப்பு நடத்­தி­னால் செலவு ஓர­ளவு குறை­யும் என்­பதை மன­திற்­கொண்டு திட்­ட­மிட்டு வரு­கின்­ற­னர்.

குறிப்­பாக தாய்­லாந்து மீது­தான் பெரும்­பா­லான படக்­கு­ழு­வி­ன­ரின் கண்­கள் பதிந்­துள்­ளன. அங்கு இந்­திப் படங்­க­ளின் படப்­பி­டிப்பு இப்­போது நடை­பெற்று வரு­வ­தா­கத் தெரி­கிறது.

"அங்கு படப்­பி­டிப்­புக்­கான செலவு குறை­வாக இருப்­பது தயா­ரிப்­பா­ளர்­க­ளைக் கவர்ந்­துள் ளது. மேலும் பயண நேர­மும் குறைவு என்­ப­தால் படக்­குழுவினர் தாய்­லாந்தை முதன்மை தேர்­வா­கக் கொண்­டுள்­ள­னர்.

"அதே­ச­ம­யம் அஜித், விஜய் உள்­ளிட்ட முன்­னணி நடி­கர்­களில் சிலர், ரசி கர்­க­ளின் அன்­புத் தொல்­லை­கள் இல்­லாத இடங்­க­ளா­கத் தேர்வு செய்­யு­மாறு இயக்­கு­நர், தயா­ரிப்­பா­ளர்­க­ளி­டம் கேட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

"எது எப்­ப­டியோ, இந்த ஆண்டு திரைக்கு வரும் பல படங்­களில் பல்­வேறு வெளி­நா­டு­களை ரசி­கர்­கள் பார்த்து ரசிக்க முடி­யும்," என்­கி­றார்­கள் கோடம்­பாக்க விவ­ரப் புள்­ளி­கள்.

இதற்­கி­டையே, சுற்­று­லாத்­து­றை­யின் வளர்ச்­சிக்­காக சில நாடு­கள் முன்­னணி கதா­நா­ய­கி­களை இல வச­மாக வர­வ­ழைத்து, தங்­கள் நாட்­டில் உள்ள சுற்­று­லா­வுக்கு உகந்த இடங்­களில் தங்க வைக்­கின்­றன. பின்­னர் அந்த நடி­கை­களை வைத்து சில விளம்­பர நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்­கின்­றன.

இவ்­வாண்டு இறு­திக்­குள் சில நாடு­க­ளைச் சுற்­றிப் பார்க்க முடி­யும் என சில நடி­கை­கள் ஆர்­வத்­து­டன் காத்­துக் கிடக்­கின்­ற­னர். தாங்­கள் நடிக்­கும் படங்­க­ளின் படப்­பி­டிப்பை அந்த நாடு­களில் நடத்­தும்­ப­டி­யும் பரிந்­துரை செய்­கின்­ற­ன­ராம். இசை, முன்­னோட்ட காட்­சித் தொகுப்பு வெளி­யீட்டு விழாக்­களை வெளி­நா­டு­களில் நடத்­து­வது குறித்­தும் சிலர் ஆலோ­சித்து வரு­கின்­ற­ன­ராம்.