'ஆங்கிலோ இந்தியன்' மூதாட்டியாக யோகி பாபு

'ஆங்கிலோ இந்தியன்' மூதாட்டியாக யோகி பாபு

1 mins read
8b6f6190-42b4-4f4f-9300-9a8ee4143a59
-

ஒரே நாளில் மூன்று படங்­க­ளுக் கான படப்­பி­டிப்­பு­களில் பங்­கேற்று வரு­கி­றார் யோகி பாபு. இந்­நி­லை­யில் புதுப் படம் ஒன்­றில் 'ஆங்­கிலோ இந்­தி­யன்' பாட்டி கதா­பாத்­தி­ரத்­தில் நடித்து வரு­கி­றார்.

படத்­துக்கு 'மிஸ் மேகி' எனத் தலைப்பு வைத்­துள்­ள­னர்.

இதன் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­பில் யோகி பாபு­வின் தோற்­றம் வித்­தி­யா­ச­மா­க­வும் அனை­வ­ரை­யும் கவ­ரும் வகை யிலும் உள்­ள­தாக ரசி­கர்­கள் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

லதா மணி­ய­ரசு இயக்­கும் இந்­தப் படத்­தில் ஆத்­மிகா நாய­கி­யாக நடிக்க, கார்த்­திக் இசை­ய­மைக்­கி­றார்.

"இந்­தப் படம் யோகி பாபு வின் நடிப்­புத் திற­மையை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தும். கதா­பாத்­தி­ரத்­தின் தன்­மையை முழு­மை­யாக உள்­வாங்கி, கச்­சி­த­மாக நடித்­துள்­ளார்.

"வச­னங்­களை அவர் மெரு­கேற்­றும் விதம் அலா­தி­யா­னது," என்று பாராட்­டு­கி­றார் இயக்­கு­நர் லதா மணியரசு.