திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
a0c24cc3-4a7c-4175-b9e4-06b1905fca13
-
multi-img1 of 3

 அஜித்தின் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது தெரிந்த விஷயம். அந்தப் படத்திற்காக அவருக்கு ரூ.105 கோடி ஊதியம் பேசப்பட்டுள்ளது.

கதைப்படி அஜித்துக்கு இரண்டு நாயகிகள் உள்ளனர். அதில் ஒருவராக நயன்தாரா முன்பே ஒப்பந்தமாகிவிட்டார். இன்னொரு நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில், இரண்டாவது நாயகியாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் ஐஸ்வர்யா. எனினும் அதில் நடிகர் மம்முட்டியின் ஜோடியாக நடித்திருந்தார்.

 இலங்கையில் நடைபெற்ற 'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. இதில் அவருக்கும் அப்படத்தின் நாயகிக்கும் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் விஜய் ஆண்டனி மட்டும் 'ஏர் ஆம்புலன்ஸ்' மூலம் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் அங்கு அவருக்கு சிகிச்சை நீடித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

 'விட்டிலிகோ' என்ற சரும நோயால் தான் பாதிக்கப்பட் டுள்ளதாக நடிகை மம்தா மோகன் தாஸ் கூறியுள்ளார்.

ஏற்கெனவே நடிகை சமந்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலை யில், மேலும் ஒரு நடிகை விநோத நோயால் பாதிக்கப் பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள் ளது. 'குசேலன்', 'சிவப்பதிகாரம்', 'தடையற தாக்க', 'குரு என் ஆளு' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மம்தா. இந்நிலையில் அண்மையில் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தன்னுடைய உடலின் நிறம் மாறி வருவதாகவும் இன்ஸ்டகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது அண்மைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

"இந்த நோயால் பாதிக்கப்பட்டால் தோல் நிறம் இழக்கும். கை, கால், உதடு, தலைமுடி என உடலின் எந்த பாகமாக இருந்தாலும் நிறம் மாறிவிடும். இதனால் உடலில் ஆங்காங்கே நிறமிழந்து திட்டுகள் உருவாகும்," என மம்தா கூறியுள்ளார்.