நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி உள்ளது 'ஜோ' திரைப்படம்.
விரைவில் வெளியீடு காண உள்ள இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 37 நாள்களில் முடித்துவிட்டனராம்.
"இது எனது நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட படம். எங்களுடைய ஒட்டுமொத்த அணியின் அடையாளம் என்றும் சொல்லலாம்.
"மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.
"கதாநாயகனான 'ஜோ'வின் பள்ளிக் காலத்தில் இருந்து அவனது திருமணத்திற்குப் பிந்தைய நாள்கள் வரையிலான காதல் பயணத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது," என்கிறார் ரியோ.
படத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்காக சில மாதங்களுக்கு நீண்ட முடி, தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்தாராம். இதன் காரணமாக வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனதாம்.
"கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுப்படங்கள் குறித்து யோசிக்க முடியவில்லை. 'ஜோ' படத்தில் 18 முதல் 28 வயது வரையிலான காலக்கட்டத்தில் ஐந்து வெவ்வேறு தோற்றங்களில் காணப்படுவேன்.
"மொத்த படப்பிடிப்பும் வெறும் 37 நாள்களில் முடிவடைந்துள்ளது. இதற்கு தயாரிப்பாளரின் ஒத்துழைப்புதான் முழுமுதற் காரணம்.
"சென்னை, ராமேசுவரம், ராமநாதபுரம், பொள்ளாச்சி, பாலக்காடு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது," என்கிறா் ரியோ.


