பிரியா: பணம் சம்பாதிக்கவே சினிமா நடிகையானேன்

பிரியா: பணம் சம்பாதிக்கவே சினிமா நடிகையானேன்

1 mins read
f48c4620-0372-4ec8-964d-7a3672e38f4b
-

யதார்த்­த­மான வாழ்க்­கையை பிர­தி­ப­லிக்­கும் படங்­களும் கதா­பாத்­தி­ரங்­க­ளும்­தான் தமக்­குப் பிடித்­த­மா­னவை என்­கி­றார் பிரியா பவானி சங்­கர்.

பணம் சம்­பா­திக்க வேண்­டும் என்­பதே திரை­யு­ல­கில் தாம் நடிப்­ப­தற்­கான முதன்­மைக் கார­ண­மாக இருந்­தது என்­றும் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தமி­ழில் நடிக்க வந்­த­போது எனக்கு எதிர்­கா­லத்­தைப் பற்­றிய பெரிய திட்­டங்­கள் எது­வும் இல்லை. ரசி­கர்­கள் என்னை ஏற்­றுக்­கொள்­வார்­களா, இல்­லையா என்­றும் கவ­லைப்­ப­ட­வில்லை. நடித்­தால் பணம் வரு­கிறது என்று நினைத்­தேன். அதற்­கா­கவே நடித்­தேன்," என்­கி­றார் பிரியா.

இப்­போது தெலுங்­கில் குடும்ப கதை­யு­டன் உரு­வா­கும் படத்­தில் நடித்து வரு­கி­றா­ராம். வேலைக்­குப் போகாத கண­வன், வேலைக்குச் செல்­லும் மனைவி ஆகி­யோர் இடையே நடை­பெ­றும் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பாக அப்­ப­டம் உரு­வா­கி­ற­தாம்.

"சினிமா பின்­னணி உள்ள குடும்­பத்­தில் இருந்து வந்­த­வர்­க­ளும்­கூட திரைத்­து­றை­யில் தங்­களை நிரூ­பிக்க கடு­மை­யாக உழைக்­கி­றார்­கள், போரா­டு­கி­றார்­கள்.

"அதை­யெல்­லாம் பார்க்­கும்­போது நானும் அதி­கம் உழைக்க வேண்­டும் என்ற எண்­ணம் மன­தில் வலுக்­கிறது," என்­று சொல்லும் பிரியா பவானி சங்கர் விரைவில் ஊதியத்தை உயர்த்த உள்ளாராம்.