அண்மையில் வெளியீடு கண்ட 'துணிவு', 'வாரிசு' ஆகிய இரு படங்களுமே வசூல் ரீதியில் சாதித்து வருகின்றன.
திரையுலகில் நடித்து சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு 31 ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஹன்சிகா.
இதனால் தமக்கு மிகுந்த மனநிறைவு கிடைப்பதாகச் சொல்கிறார்.
"பண்டிகை நாள்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று என் அம்மா சிறுவயதிலேயே எனக்கு சொல்லி கொடுத்துள்ளார். நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்றும் சொல்வார்.
"அதனால்தான் நான் கதாநாயகி ஆன பிறகு குழந்தைகளைத் தத்தெடுக்கத் தொடங்கினேன். இப்போது 31 குழந்தைகளை என்னால் பராமரிக்க முடிகிறது.
அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். கடவுள் ஆசியால் எல்லாம் சாத்தியமாகிறது. எனக்கு உதவும் அனைவருக்கும் நன்றி," என்கிறார் ஹன்சிகா.

