'நிறைய ஆசைகள் உள்ளன'

'நிறைய ஆசைகள் உள்ளன'

3 mins read
1920e352-4d19-4972-85e5-301dd0a24713
-

'தலைக்­கூத்­தல்' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பில் உரு­வா­கும் படத்­தில் நாய­கி­யாக நடிக்­கி­றார் வசுந்­தரா.

ஆர்யா நாய­க­னாக நடித்த 'வட்­டா­ரம்' படத்­தில் அதிசயா கதா­பாத்­தி­ரம் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான வசுந்­தரா, அதன் பின்­னர் 'பேராண்மை', 'தென்­மேற்­குப் பரு­வக் காற்று' உள்­ளிட்ட சில தர­மான படங்­களில் மட்­டுமே நடித்­துள்­ளார்.

முன்­னிலை நாய­கி­யாக உரு­வெ­டுக்­கா­விட்­டா­லும், ரசி­கர்­க­ளுக்கு நன்றாக அறி­மு­க­மாகி உள்­ளார். இதுவே தமக்­குப் போதும் என்­கி­றார் வசுந்­தரா.

"விஜய் சேது­பதி நாய­க­னாக அறி­மு­க­மான படம் 'தென்­மேற்­குப் பரு­வக் காற்று'. இயக்­கு­நர் சீனு ராம­சாமி­யின் முதல் படம். அதில் நான்­தான் நாயகி என்று சொல்­லிக் கொள்­வ­தில் எனக்கு எப்­போ­துமே பெரு­மி­தம் உண்டு.

"இயக்­கு­நர்­கள் ஜன­நா­தன், சீனு ராம­சாமி ஆகிய இரு­வ­ரும் திரைத்­துறை சார்ந்த ஏரா­ள­மான நுணுக்­கங்­க­ளைச் சொல்­லிக் கொடுத்­த­னர்.

"அத­னால்தான் பத்து ஆண்­டு­களைக் கடந்த பிற­கும் திரை­யு­ல­கில் தாக்­குப்­பி­டிக்க முடி­கிறது," என்று சொல்­லும் வசுந்­தரா, குறைந்த எண்­ணிக்­கை­யி­லான படங்­களில் நடித்­தா­லும் நல்ல பாத்­தி­ரங்­கள் அமைந்­தது உற்­சா­கம் அளித்­தது என்­கி­றார்.

குடும்­பப் பாங்­கான தோற்­றம் இருப்­ப­தால், குடும்­பக் கதை­களில் நடிக்க மட்­டுமே தாம் பொருத்­த­மாக இருப்­ப­தா­கக் கூறப்­படு­வதை ஏற்க மறுப்­ப­வர், குடும்­பப்­பாங்­கான தோற்­றம் கொண்ட ஒரு பெண் நக­ரத்து, நாக­ரிக பெண்­ணாக நடிக்­கக்­கூ­டாதா, அதற்கு ஏதே­னும் தடை உள்­ளதா என்று கேள்வி எழுப்­பு­கி­றார்.

தற்­போது உத­ய­நிதி ஸ்டா­லி­னு­டன் 'கண்ணை நம்­பாதே' படத்­தில் நக­ரத்துப் பெண்­ணாக நடித்­துள்­ளா­ராம். மு.மாறன் இயக்­கி­யுள்ள இந்த திகில் படத்­தில் முற்­றி­லும் மாறு­பட்ட அனு­பவத்தை பெற்­ற­தா­கச் சொல்­கி­றார்.

"இப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரத்­துக்­காக நீண்­ட­கா­ல­மாக காத்­தி­ருந்­தேன். அந்த ஆசை இப்­போ­து­தான் நிறை­வேறி உள்­ளது. என் மீது நம்­பிக்கை வைத்து, இந்­தக் கதா­பாத்­தி­ரத்தை அளித்த இயக்­கு­ந­ருக்கு நன்றி.

"முன்பு 'பேராண்மை' படத்­தில் முரட்­டுத்­த­ன­மாக நடந்­து­கொள்­ளும் பெண்­ணாக நடித்­தி­ருந்­தேன். இப்­போது அதே­போன்ற கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ளது.

"இந்­தப் படத்­தில் உத­ய­நி­திக்­கும் எனக்­கும் விறு­வி­றுப்­பான சண்­டைக் காட்­சி­களும் உள்­ளன. இதற்கு முன்பு 'கண்ணே கலை­மானே' படத்­தில் அவ­ரு­டன் முத­லில் இணைந்து நடித்­தேன். இப்­போது அடுத்த வாய்ப்பு கிடைத்­துள்­ளது. சண்­டைக் காட்­சி­களில் சிறப்­பாக நடித்­த­தாக உத­ய­நிதி உள்­பட ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வி­ன­ரும் பாராட்டு தெரி­வித்­த­னர்," என்­கி­றார் வசுந்­தரா.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு சமுத்­தி­ரக்­கனி இயக்­கத்­தில் 'போராளி' படத்­தில் நடித்­த­வர், தற்­போது 'தலைக்­கூத்­தல்' படத்­தில் அவ­ரு­டன் இணைந்து நடித்­துள்­ளார்.

'லென்ஸ்' படத்தை இயக்­கிய ஜெய­பி­ர­காஷ் ராதா­கிருஷ்­ணன் இயக்­கும் இப்­ப­டத்­தில் சமுத்­தி­ரக்­கனி, கதிர் என இரண்டு நாய­கர்­க­ளாம்.

"நான் சமுத்­தி­ரக்­க­னி­யின் ஜோடி­யாக நடித்­துள்­ளேன். சில கிரா­மங்­களில் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்ட முதி­ய­வர்­க­ளைத் தலைக்­கூத்­தல் என்­கிற முறை­யில் கரு­ணைக்­கொலை செய்­வதை விவ­ரிக்­கும் படம் இது.

"மிக வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளம். சமுத்­தி­ரக்­கனி சார் இப்­ப­டி­யெல்­லாம் நடிப்­பாரா என வியப்­பாக இருந்­தது.

"ஒரு­சில காட்­சி­களில் அவ­ரது நடிப்­பைக் கண்டு படப்­பி­டிப்­புத் தளத்­தில் இருந்த அனை­வ­ரும் அழு­து­விட்­டோம்," என்று சொல்­லும் வசுந்­தரா தற்­போது 'பப்­கோவா' எனும் இணை­யத் தொட­ரில் நடித்து வரு­கி­றார்.

மேலும் ஓடிடி தள­த்­தில் வெளி­யாக உள்ள திரைப்­ப­டத்­தி­லும் நடிக்­கி­றா­ராம்.

மணி ரத்­னத்­தின் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் ஒரு முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் வசுந்­தரா நடிப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யா­னது. எனி­னும் அவ்­வாறு நடக்­க­வில்லை.

"அந்­தச் செய்தி எனது கவ­னத்­துக்­கும் வந்­தது. இப்­போ­தும்­கூட 'பொன்­னி­யின் செல்­வன்' மாதி­ரி­யான வர­லாற்­றுப் படங்­களில் நடிக்க மிகுந்த ஆவல் கொண்­டி­ருக்­கி­றேன். இன்­னும் பல ஆசை­களும் உள்­ளன. அவை எல்­லாம் காலப்­போக்­கில் ஒவ்வொன்றாக நிறைவே­றக்­கூடும்," என்­கி­றார் வசுந்­தரா.