அசோக் செல்வனின் எதிர்கால கனவுகள்

அசோக் செல்வனின் எதிர்கால கனவுகள்

3 mins read
e656875c-d301-4d04-bd7d-e66f3048656e
-

தமிழ்த் திரை­யில் வளர்ந்து வரும் இளம் நா­ய­கர்­களில் ஒரு­வர் அசோக் செல்­வன். இவ­ரது நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான 'நித்­தம் ஒரு வானம்' திரைப்­ப­டம் ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பைப் பெற்றது. படங்­கள் வெற்றி பெற்­றால் அது நிம்­ம­தி­யான தூக்­கத்­தைக் கொடுக்­கும் என்­கி­றார் நடி­கர் அசோக் செல்­வன்.

இவர் நடித்த 'சூது கவ்­வும்', 'தெகிடி', 'பீட்சா 2' ஆகிய படங்­கள் தமிழ்த் திரை­யின் கதைக்­

க­ளத்தை மாற்­றிய படங்­கள் என்று சொல்­லாம். 'சில நேரங்­களில் சில மனி­தர்­கள்', 'ஆரஞ்சு மிட்­டாய்', 'ஹாஸ்­டல்', 'ஓ மை கட­வுளே' படங்­கள் இளை­ஞர்­க­ளிடையே நல்ல

வர­வேற்­பைப் பெற்று உள்­ளன.

தான் நடிக்­கும் படங்­கள் குறித்து பிர­பல ஆங்­கில ஊட­கத்­திற்­குப் பேட்டி­அளித்த அசோக் செல்­வன், "ஒரு படத்­தின் வெற்­றிக்­குப் பல கார­ணங்­கள் உள்ளன. உதா­ர­ண­மாக 'ஓடிடி'யில், 'நித்­தம் ஒரு வானம்' படத்­தைப் பார்த்­த­வர்­கள், திரை­ய­ரங்­கில் பார்க்க தவ­றி­விட்­ட­தாக வருத்தப்பட்டார்கள். என்­னு­டைய சில படங்­க­ளின் வெளி­யீட்டு நேர­மும் விளம்­ப­ர­மும் பெரி­தாக இருப்­பது இல்லை.

"இருப்­பி­னும் தற்பொழுது வணி­கம் மாறி­விட்­டது. 'ஓடிடி' பெரிய நிறு­வ­ன­மாக மாறி­விட்­ட­தால் இனி திரை­ அரங்­கு­க­ளின் வசூல் மட்­டுமே திரைப்­ப­டங்­க­ளின் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்கும் என்று சொல்ல முடி­யாது. இப்­படி பலதரப்­பட்ட படங்­களை முயற்சி செய்­யும் வாய்ப்பு கிடைத்­த­தில் மகிழ்ச்சி.

"எனது திரை­ய­ரங்கு வெளி­யீ­டு­கள் அனைத்­தும் 'ஓடிடி' தளங்­கள் மற்­றும் தொலைக்­காட்­சி­ சேனல்களால் வாங்­கப்­பட்­ட­தில் நான் மகிழ்ச்­சி­ அடை­கி­றேன்," என்­றார். தொடர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அசோக் செல்­வன் சினி­மா­வுக்கு வந்­தது எப்­படி?

எந்த சினிமா பின்­ன­ணி­யும் யோச­னை­யும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்தேன். 'விஸ்­காம்' படிக்­கும்போது தெருக்­கூத்து பயிற்­சி­யில் ஈடு­பட்­டேன். அப்­போது நடிப்­பில் ஆர்­வம் வந்­தது.

குறும்­ப­டங்­களில் நடிக்­கும் வாய்ப்­பும் கிடைத்­தது. திரைத்­து­றைக்கு வந்து நிறைய கஷ்­டப்­பட்­டேன். சினி­மா­வுக்கு வரும் அனைவரும் கஷ்­டப்­பட்டுத்தான் வரு­கி­றார்­கள். நான் நடிக்­கும் ஒவ்­வொரு பட­மும் மாறு­பட்ட களங்­களில் வித்­தி­யா­ச­மாக இருக்­க­வேண்­டும் என்று நினைக்­கி­றேன். அப்­ப­டித்­தான் என் படங்­களைத் தேர்ந்­தெ­டுக்­கி­றேன்.

பிடித்த இயக்­கு­நர்?

மணி­ரத்­னம், நலன் குமா­ர­சாமி, லோகேஷ் கன­க­ராஜ் ஆகி­யோ­ரைப் பிடிக்­கும்.

எதிர்­கால கன­வு­கள்?

நிறைய படங்­களில் நடிக்­க­வேண்­டும். அனைத்­து­லக அள­வில் தமிழ்ப் படங்­க­ளைக்கொண்­டு­செல்லவேண்­டும். 'சில சம­யங்­களில்' படத்­தைப் போன்ற கதை­களில் நடிக்கவேண்டும்.

'தெகிடி' மாதிரி மீண்­டும் திடீர் திருப்­பங்­கள் நிறைந்த மர்மப் படம் எப்­போது?

நான் நடித்து வரும் 'போர்த்­தொ­ழில்' அது­போன்ற கதை­தான். அது 'தெகிடி' படத்­தைப் போன்று நல்ல வர­வேற்­பைப் பெறும் என நம்­பு­கி­றேன்.

'நித்­தம் ஒரு வானம்'?

கல்­லுாரி மாண­வன், நக­ரத்து இளை­ஞன், வெகு­ளித்­த­ன­மான கிராமத்துக்காரன் என மூன்று கதா­பாத்­தி­ரங்­களில் அனு­ப­வித்து மகிழ்ச்­சி­யாக நடித்­தேன். இப்­போது அதற்கு வரும் பாராட்­டு­கள் மன­திற்கு நிம்மதியைத் தருகின்றன.

2022ல் மிக­வும் பிடித்த படம்?

தமி­ழில் 'மண்­டேலா', ஹாலி­வுட்­டில் 'அவ­தார் தி வே ஆப் வாட்­டர்'.

நீங்­கள் இயற்கை விரும்­பி­யாமே!

கொரோனா ஊர­டங்­கில் சொந்த ஊரான ஈரோட்­டில் இருந்­தேன். அன்­று­தான் இயற்­கை­யின் அருமை புரிந்­தது. இயற்­கை­யான காட்சி உள்ள இடங்

­க­ளுக்குப் பய­ணித்­தும் முடிந்­த­வரை இயற்­கை­யோடு இணைந்­தும் இருக்­க­வேண்­டும் என்று விரும்­பு­கி­றேன்.

வெற்றி என்­ப­தன் வரை­யறை?

வெற்றி என்­பது நிம்­ம­தி­யான தூக்கம். என் வேலையில் தன்னிறைவு அடைவது அவ்­வ­ளவு எளி­தல்ல. இப்­படிச் செய்­தி­ருக்­க­லாம். அப்­படிச் செய்­தி­ருக்­க­லாம் எனத் தோன்­றும். முடிந்த வரை தன்­னி­றை­வு­டன் நடிப்­பதே வெற்றி.

அடுத்­த­டுத்து வரும் படங்­கள்...

'போர்­த்தொ­ழில்', யுவன் சங்­கர் ராஜா தயா­ரிப்­பில் 'சபா', பா.ரஞ்­சித் தயா­ரிப்­பில் கிரிக்­கெட்டை மையப்­ப­டுத்­தி ஒரு படம் வெளி­வர தயா­ராக இருக்­கின்­றன. கிரா­மத்துக் கதை­யில் நடிக்க ஆசை இருக்­கிறது. விரை­வில் கிரா­மத்துக் கதை­யில் என்­னைப் பார்க்­க­லாம். சிறந்த வில்­லன் கதா­பாத்­தி­ரத்­திலும் நடிக்­க­ விரும்புகிறேன். அதற்­கான வாய்ப்­பிற்­காக காத்­தி­ருக்­கி­றேன்.

சில படங்­க­ளின் தோல்­வி­ குறித்து என்ன நினைக்­கி­றீர்­கள்?

எனது குரு­வான கமல்ஹாச­னின் வார்த்­தை­க­ளைப் பின்­பற்றி, நான் எப்­போ­தும் சிறந்து விளங்­கப் பாடு­ப­டு­கி­றேன். மேலும் எனது ஒவ்­வொரு திரைப்­ப­டத்­தி­லும் நான் சிறப்­பாக நடித்து வரு­கி­றேன் என நம்­பு­கி­றேன். பா.ரஞ்­சித் படத்­திற்­குப் பிறகு சிறிய இடை­வெளி எடுக்­க­வும் திட்­ட­மிட்­டுள்­ளேன். எனது வாழ்க்­கையை மதிப்­பீடு செய்து எனது எதிர்­கா­லத் திட்­டங்­க­ளைப் பற்றி முடி­வெ­டுக்க விரும்­பு­கி­றேன்" என்­றார் நடி­கர் அசோக் செல்­வன்.