பொங்கலுக்கு வெளியான மூன்று தெலுங்கு படங்களில் சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா', பால
கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'வீரசிம்ஹா ரெட்டி' இரண்டு படங்களிலும் நாயகியாக ஷ்ருதிஹாசன் நடித்திருந்தார்.
தந்தை வயதுள்ள நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார் என்று பலரும் பேசி வந்தனர். ஆனால், அவற்றையும் மீறி இந்த ஜோடிகளை ரசிகர்கள்
ஏற்றுக்கொண்டு படங்களை வெற்றிப் படங்களாக்கி இருக்கிறார்கள்.
தமிழ்ப் படங்களைவிட வசூலில் முன்னணியில் இருக்கின்றன இந்த தெலுங்குப் படங்கள்.
ஸ்ருதிஹாசனுக்குக் கிடைத்த இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

