நடிகர்கள் விஜய், அஜித்
இருவரின் படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாயின. படங்கள் வெளியான நாள் முதல் யாருடைய படம் அதிக வசூலைப் பெற்றிருக்கிறது என்ற விவாத்தில் கோலிவுட் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து சண்டை போட்டு வருகின்றன.
'துணிவு', 'வாரிசு' இரண்டு படங்களும் ஒரே நாளில் சமமான அளவு திரையரங்குகளில் வெளியாகி இரண்டு படங்களும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இவர்
களின் ரசிகர்கள் தங்களுடைய நாயகன்தான் முன்னணி, வசூல் நாயகன் என்பதை நிரூபிக்க பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 'வாரிசு' படம் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 210 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இதன் நம்பகத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே 'துணிவு' படமும் அனைத்துலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களே தீப்பிடிக்கும் வகையில் இந்த விவாதங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "படங்களை படமாக பாருங்கள். உங்களுடைய நாயகர்களைக் கொண்டாடுங்கள். தேவையில்லாமல் வலைத்தளங்களில் சண்டை போடாதீர்கள். இதை உடனடியாக நிறுத்துங்கள்," என்று கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.

