ஜல்லிக்கட்டு போட்டியில் இறங்கிய சகோதரர்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் இறங்கிய சகோதரர்கள்

1 mins read
cddcdfa2-3466-41d0-9db6-a10b72da44f9
-

நடி­கர் கார்த்தி தற்­பொ­ழுது ராஜு முரு­கன் இயக்­கத்­தில் 'ஜப்­பான்' என்ற படத்­தில் நடித்து வரு­கி­றார். இந்­தப் படத்­திற்­குப் பிறகு '96' படத்தை இயக்­கிய பிரேம்­கு­மார் இயக்­கத்­தில் 'ஜல்­லிக்­கட்டு' என்ற படத்­தில் நடிக்க இருக்­கி­றார்.

'ஜல்­லிக்­கட்டு' என்ற தலைப்­பால் அது கட்­டா­யம் ஜல்­லிக்­கட்டு சம்­பந்­தப்­பட்ட கதை­யா­கத்­தான் இருக்­கும் என்று தெரி­கிறது.

இந்­நி­லை­யில் கார்த்­தி­யின் அண்­ணன் சூர்யா வெற்­றி­

மா­றன் இயக்­கத்­தில் 'வாடி­வா­சல்' என்ற படத்­தில் நடிக்க ஒப்­பந்­தமாகி

இருக்­கி­றார். விரை­வில் படப்­பி­டிப்பு தொடங்க இருக்­கிறது.

ஆனால் 'வாடிவாசல்' படத்திற்கு முன்பாகவே கார்த்தியின் 'ஜல்லிக்கட்டு' திரை காணும் என்று 'ஜல்லிக்கட்டு' படக்குழு கூறுகிறது.