கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் நவீன பாணியிலான பிரத்யேக உடையை அணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்ற தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரணுக்கு விருது கிடைத்து இருக்கிறது.
பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை
ஈர்த்திருக்கும் தெலுங்குத் திரையுலகமும் அதில் பணியாற்றும் கலைஞர்களும்
தங்களை அனைத்துலக அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்'.
இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்
சனங்களைப் பெற்றது. அண்மையில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் 'கோல்டன் குளோப்' விருதை வென்றது.
'கோல்டன் குளோப்' விருது நிகழ்ச்சியானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் நட்சத்திர நடிகர்களும் நடிகைகளும் கலைஞர்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கலந்துகொள்வார்கள்.
அந்த விழாவில் கலந்துகொண்ட தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரண், அணிந்திருந்த
தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய நவீன ஆடைக்காக, 'சிறந்த ஆடை அணிந்து விழாக்களில் கலந்துகொள்ளும் நட்சத்திர நடிகர்'களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் சரண் தன்னுடைய நடிப்பில் மட்டுமல்லாமல், கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரத்யேகமான ஆடையை அணிவதில் அலாதி விருப்பம் கொண்டவர். 'கோல்டன் குளோப்' விருது வழங்கும் விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்துகொள்வதற்காக உலக அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான தருண்
தஹிலியானி மற்றும் அவரது குழுமத்தின் தயாரிப்பில் உருவான 'ரீகல் மினிமலிஸ்ட் ஃபேஷன்' பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆடையை
அணிந்திருந்தார். அத்துடன் நவீன ஆடைகளை அணிவதில்
தனித்துவமான அடையாளமாகவும் இவர் தேர்வாகியிருக்கிறார்.
இந்நிலையில் 'பிரிட்டிஷ் அகடாமி ஃபிலிம்ஸ் அவார்ட்ஸ்' எனப்படும் 'பாஃப்டா' விருதுகள்
கள் வழங்கும் நிகழ்ச்சி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
'பாஃப்டா' 2023ஆம் ஆண்டுக்கான விருது விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் 'ஆர்.ஆர்.ஆர்' போட்டியிட்டது. ஜேம்ஸ் கேமரூன் உள்பட பல ஹாலிவுட் கலைஞர்களால் பாராட்டப்பட்ட 'ஆர்.ஆர்.ஆர்' கண்டிப்பாக விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்பொழுது இறுதிக்கட்ட போட்டியிலிருந்து இப்படம் வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
'ஆர்.ஆர்.ஆர்' திரைப்
படம் கண்டிப்பாக 'பாஃப்டா' விருது வெல்லும் என படக்குழுவினரும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் உள்ள படக்குழு, அடுத்த வாரம் நடைபெறும் ஆஸ்கர் விழாவில் விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆஸ்கர் விருது விழாவில் 15 பிரிவுகளில் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் போட்டியிடுகிறது. இதனால் ஏதேனும் ஒரு சில பிரிவுகளில் ஆஸ்கர் விருது கிடைக்கும் என சொல்லப்
படுகிறது.
ஏற்கெனவே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 'விமர்சகர்கள் தேர்வு விருது' விழாவில் 'சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்
படம்', 'சிறந்த பாடல்' என இரண்டு விருதுகளையும் வென்று 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராம் சரணுக்கு சிறந்த ஆடை அணிபவர் என்ற விருது

