பிக் பாஸ் தொடரின் வெற்றியாளராக அஸீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ரூபாய் 50 லட்சம் ரொக்கத்தையும், கார் ஒன்றையும் பரிசாக தட்டிச்சென்றார்.
விக்ரமன் இரண்டாவது நிலையிலும், ஷிவின் மூன்றாவது நிலையிலும் வந்தனர். முதல் பரிசை தட்டிச் செல்ல அஸீமிற்கும் விக்ரமனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
பிக் பாஸ் தொடரில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கெடுத்தனர்.
மூன்றாவது நிலையில் வந்த ஷிவின் முதல் மூன்று நிலைகளுக்கு முன்னேறிய முதல் திருநங்கை ஆவார். பிக் பாஸ் தொடரில் போட்டியிடும் இரண்டாவது திருநங்கை அவர். தொடரின் ஐந்தாவது பருவத்தில் நமிதா என்பவர் பங்கெடுத்தார்.
இந்தத் தொடரில் அஸீமிற்கு எதிராக கடும் கருத்துகள் எழுந்தன. அவர் ஷிவினை நடத்திய விதத்திற்காக படைப்பாளர் கமல் ஹாசன் அவரை கண்டித்தார். போட்டியின்போது பலமுறை அவரை வெளியேற்ற சக போட்டியாளர்கள் அவரை நியமனம் செய்தனர்.
தனது வெற்றியைத் தொடர்ந்து வெற்றி கோப்பையுடன் அஸீம் தனது சமூகத் தளங்களில் படம் ஒன்றை பதிவேற்றம் செய்தார். அவருடைய ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

