'பிக்பாஸ்' - வெற்றிவாகை சூடிய அஸீம்

'பிக்பாஸ்' - வெற்றிவாகை சூடிய அஸீம்

1 mins read
e16408cf-3b00-4a5b-8734-374be8b0efd7
-

'பிக்பாஸ்' தொட­ரின் வெற்­றி­யா­ள­ராக அஸீம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். அவர் ரூபாய் 50 லட்­சம் ரொக்­கத்­தை­யும் கார் ஒன்­றை­யும் பரி­சாக தட்­டிச்­சென்­றார்.

விக்­ர­மன் இரண்­டா­வது நிலை­யி­லும் ஷிவின் மூன்­றா­வது நிலை­யி­லும் வந்­த­னர். முதல் பரிசை தட்­டிச் செல்ல அஸீ­மிற்­கும் விக்­ர­ம­னுக்­கும் இடையே கடும் போட்டி நில­வி­யது.

'பிக்பாஸ்' தொட­ரில் மொத்­தம் 21 போட்­டி­யா­ளர்­கள் பங்­கெ­டுத்­த­னர். மூன்­றா­வது நிலை­யில் வந்த ஷிவின் முதல் மூன்று நிலை­களுக்கு முன்­னே­றிய முதல் திரு­நங்கை ஆவார். பிக் பாஸ் தொட­ரில் போட்­டி­யி­டும் இரண்­டா­வது திரு­நங்கை அவர். தொட­ரின் ஐந்­தா­வது பரு­வத்­தில் நமிதா என்­ப­வர் பங்­கெ­டுத்­தார்.

இந்­தத் தொட­ரில் அஸீ­மிற்கு எதி­ராக கடும் விமர்சனங்கள் எழுந்­தன. அவர் ஷிவினை நடத்­திய விதத்­திற்­காக படைப்­பா­ளர் கமல் ஹாசன் அவரைக் கண்­டித்­தார்.

போட்­டி­யின்­போது பல­முறை வெளி­யேற்ற சக போட்டி­யா­ளர்­கள் அவரை முன்மொழிந்தனர். தனது வெற்­றி­யைத் தொடர்ந்து வெற்றிக் கோப்­பை­யுடன் அஸீம் தனது சமூ­க ஊடகப் பக்கங்களில் படம் ஒன்றைப் பதி­வேற்­றம் செய்­தார். அவ­ரு­டைய ரசி­கர்­கள் பல­ரும் அவ­ருக்கு வாழ்த்­து­ தெரி­வித்து வரு­கின்­ற­னர்.