'என் கடந்தகால வேதனை'

'என் கடந்தகால வேதனை'

3 mins read
89e5d61c-52e7-4324-94d3-ea1ec5878f0f
-

இன்று திரை­யு­ல­கில் முன்­னணி நாய­கி­யாக பெய­ரெடுத்­துள்­ளது மகிழ்ச்சி அளித்­தா­லும் இந்த வெற்­றிக்­குப் பின்­ன­ணி­யில் தமது கடும் உழைப்பு உள்­ள­தா­கச் சொல்­கி­றார் ரகுல் பிரீத் சிங்.

தற்­போது கமல்­ஹா­ச­னின் 'இந்­தி­யன் 2', சிவ­கார்த்­தி­கே­ய­னின் 'அய­லான்' உள்­ளிட்ட படங்­களில் நடித்து வரு­ப­வர், அண்­மைய பேட்­டி­யில் தனது கடந்த காலத்தை நினைவு­கூர்ந்­துள்­ளார். மேலும் வேதனையளித்த சில சம்பவங்களைப் பற்றி பதிவு செய்துள்ளார்.

"திரை­யு­ல­கில் அறிமுகமான புதிதில் எனக்கு எந்­த­வி­த­மான சினிமா பின்­னணி­யும் இல்லை. மும்­பை­யி­லுள்ள ஒரு தங்­கு­வி­டு­தி­யில் அமர்ந்து எந்­தெந்த படத் தயா­ரிப்பு அலு­வ­ல­கங்­க­ளுக்குச் செல்லவேண்­டும், எங்கெல்லாம் நடிகர்களுக்கான தேர்வு நடக்­கிறது என்­பது குறித்­தெல்­லாம் தெரிந்­து கொள்­வேன்.

"பிறகு பையில் சில உடை­களை வைத்­துக்கொண்டு கிளம்புவேன். ஆங்காங்கே நான் செல்லும் காரி­லேயே அவற்றை அடுத்தடுத்து மாற்­றிக்கொள்­வேன். அப்­போது என் மனம் மிகுந்த வேத­னைக்கு ஆளா­கும்.

"சில வாய்ப்­பு­கள் வரு­வது போல் இருந்து திடீ­ரென வேறொரு நடி­கைக்­குச் சென்­று­வி­டும். சில படங்­களில் என்னை ஒப்­பந்­தம் செய்­து­விட்டு, பிறகு மாற்றி­னார்­கள்.

"இதை­யெல்­லாம் போராட்­டம் என நினைக்க மாட்­டேன். ஏனென்­றால் சிர­மப்­படா­மல், உழைக்­கா­மல் எது­வும் கிடைக்­காது.

"இதை உணர்ந்து கொண்­ட­தால் சலிப்­பின்றி உழைத்­தேன்," என்று ரகுல் பிரீத் சிங் தெரி­வித்­துள்­ளார்.

கமல்­ஹா­ச­னு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது தமது வாழ்­வில் கிடைத்த மிகப்­பெ­ரிய அதிர்ஷ்­டம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், கம­லும் அமி­தாப்­பச்­ச­னும்­தான் இந்­திய சினி­மா­வின் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் எனத் தெரி­வித்­துள்­ளார்.

"தமிழ் சினி­மா­வில் பெரும் சாத­னை­க­ளைப் படைத்த படங்­களில் 'இந்­தி­யன்' பட­மும் ஒன்று. அதன் இரண்­டாம் பாகத்­தில் நடிப்­ப­தும் கமல்­ஹா­ச­னு­டன் இணைந்து இருப்பதும் பெரும் உற்­சா­கம் அளிக்­கிறது.

"இந்­திய சினிமா என்­பது கமல், அமி­தாப்­பச்­சன் போன்­ற­வர்­க­ளுக்­குச் சொந்­த­மா­னது. நூறாண்­டுக்­கும் மேலான இந்­தி­யத் திரை­யு­ல­கில் இவர்­கள் இரு­வ­ரும் பல்­வேறு சாத­னை­க­ளைப் புரிந்­துள்­ள­னர். இரு­வ­ருமே அறு­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக திரை­யு­ல­கில் நீடிக்­கின்­ற­னர். இவ்­வ­ளவு ஆண்­டு­கள் சலிப்­பின்றி உழைக்க முடி­யுமா என்­பதை நினைத்­தால் வியப்­பாக உள்­ளது," என்­கி­றார் ரகுல் பிரீத் சிங்.

கம­லும் அமி­தாப்­பச்­ச­னும் குறுக்கு வழி­யில் வெற்றி­கள் கிடைக்­காது என்­பதை இளை­யர்­களுக்கு உணர்த்தி உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள ரகுல், இரு­வ­ரது ஒவ்­வொரு செயல்­பா­டும் அடுத்தடுத்த தலை­மு­றை­யி­னரை பல்­வேறு வகை­யி­லும் ஊக்­கப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது என்­கி­றார்.

"நாம் செய்­யும் வேலை­யில் மிக­வும் ஆர்­வ­மாக இருக்க வேண்­டும். அப்­படி இருந்­தால்­தான் பிறரைப் போன்று நாமும் சாத­னை­கள் புரிய முடி­யும்.

"என்­னைப் பொறுத்­த­வரை 'இந்­தி­யன் 2' படத்­தில் நடித்த அனு­ப­வங்­களை வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க இய­லாது. தற்­போ­து 'அய­லான்' படத்­துக்­கான எனது வச­னப் பகு­தி­களின் படப்­பி­டிப்­பும் நிறை­வ­டைந்­துள்­ளது. இரு படங்­க­ளுக்­கான பாடல் காட்­சி­களில் மட்­டுமே நடிக்க வேண்­டி­யுள்­ளது, இரு படங்­க­ளின் வெளி­யீட்­டுக்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் ரகுல் பிரீத் சிங்.

'இந்­தி­யன் 2' படத்­தில் கம­லுக்கு ஜோடி­யாக காஜல் அகர்­வா­லும் ரகுல் பிரீத் சிங்­கும் நடிக்­கின்­ற­னர். மேலும், பிரியா பவானி சங்­கர், சித்­தார்த், ஐஸ்­வர்யா ராஜேஷ் ஆகி­யோ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

காஜல் தமக்கு நல்ல தோழி என்று குறிப்­பிட்­டுள்ள ரகுல், பெண்­கள் தன்­னம்­பிக்­கை­யுடன் செயல்­பட்­டால் திரு­ம­ணத்­துக்குப் பிற­கும் சாதிக்க முடி­யும் என்கிறார்.