அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்துள்ளார் இளம் நாயகி பிரியங்கா அருள் மோகன். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க சந்தீப் கிஷன், நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள பிரியங்கா, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தின் முக்கிய காட்சிகளை குற்றாலம் பகுதியில் தொடர்ந்து 80 நாள்களுக்குப் படமாக்க உள்ளனர்.
'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் விரை வில் தயாராகும் என ஜெயம் ரவி தெரிவித்துள் ளார். நீண்ட நாள்களுக்கு முன்பே இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானபோதும் இப்படத்தின் பணிகள் தொடங்கவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக ரசிகர்கள் கருதினர். இந்நிலையில், 'பொன்னி யின் செல்வன்' படத்தில் நடிப்பதற்கு முன்பே 'தனி ஒருவன் 2' படத்தை எடுக்க திட்டமிட்டதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். "ஆனால் நானும் இயக்குநர் ராஜாவும் வேறு பணிகளில் இருந்ததால் தாமதமானது. விரைவில் 'தனி ஒருவன் 2' படம் உருவாகும். அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன," என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
'வாரிசு' படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஹைதரா பாத்தில் உள்ள நட்சத்திர தங்கு விடுதி ஒன்றில் எளிமையான முறையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு 'கேக்' ஊட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியரும் படத்தின் வசனகர்த்தாவுமான விவேக், நடிகர் ஷாம் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
பட வசூல் பற்றி இளையர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் இதனால் அவர்களுடைய பொன்னான நேரமும் ஆற்றலும் வீணாகிறது என்றும் ஆர்.ஜே..பாலாஜி கூறியுள்ளார். அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'ரன் பேபி ரன்'. கிருஷ்ணகுமார் இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, இளையர்கள் தங்களுடைய நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றார். "அமெரிக்காவில் எவ்வளவு வசூல், ஐரோப்பாவில் எவ்வளவு வசூல் என்று யோசிப்பதில் இளையர்களின் நேரமும் ஆற்றலும் வீணாகிறது. கோடிகள் செலவழித்து படம் தயாரிப்பவர்கள் இதுபற்றி கவலைப்பட்டுக் கொள்வார்கள்," என்றார் ஆர்.ஜே.பாலாஜி.
