பிரியா: சொந்த உணவகம் என்ற கனவு நனவானது

பிரியா: சொந்த உணவகம் என்ற கனவு நனவானது

1 mins read
fc7a9d91-bc9f-46fe-b875-495fe8d397d1
-

சொந்­த­மாக உண­வ­கம் தொடங்கி உள்­ளார் நடிகை பிரியா பவானி சங்­கர்.

சொந்த உண­வ­கம் என்ற கனவு நன­வா­கும் நாள் நெருங்கி வரு­வது மகிழ்ச்சி அளிப்­ப­தாக அவர் சமூக ஊட­கப் பதி­வில் குறிப்­பிட்­டார்.

மேலும், உண­வ­கம் தொடர்­பான காணொளி ஒன்­றை­யும் பிரியா பகிர்ந்­துள்­ளார்.

இதற்­கி­டையே, பணம் சம்­பா­திப்­பது தொடர்­பாக தாம் கூறி­யது சர்ச்­சை­யாக மாறி­யி­ருப்­பதை அண்­மை­யில் தாம் அறிந்­து­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள பிரியா, அந்­தச் சர்ச்­சை­யைப் பெரி­தாக்க வேண்­டாம் என தாம் அமைதி காத்­த­தா­கக் கூறி­யுள்­ளார்.

"நான் கூறி­ய­தாக வெளி­யான தக­வ­லின் நம்­ப­கத்­தன்மை தெரி­யா­மல் பலர் சமூக ஊட­கங்­களில் கருத்து பதி­விட்டு வரு­கின்­ற­னர். முத­லில் நான் அப்­ப­டிச் சொல்­லவே இல்லை. அப்­ப­டியே நான் சொல்லி இருந்­தா­லும் அதில் என்ன தவறு இருக்­கிறது?

"பணத்­திற்­காகத்தான் அனை­வ­ரும் வேலை செய்­கி­றோம். இந்த உண்­மையை திரைக் கலை­ஞர்­கள் சொன்­னால் மட்­டும் ஏன் இவ்­வ­ளவு கேவ­ல­மாக சித்­தி­ரிக்க வேண்­டும்.

"என் வழி­யில் நான் வேலை செய்­கி­றேன். இதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை," என்று தெளிவாக விளக்­கம் அளித்­துள்­ளார் பிரியா பவானி சங்­கர்.