‘பாய்ந்து துரத்திய புலியைக் கண்டு பயந்துவிட்டார் யோகிபாபு’

ஜீவா, ‘மிர்ச்சி' சிவா கூட்­ட­ணி­யில் உரு­வாகி உள்ள ‘கோல்­மால்' என்ற படத்தை இயக்கி முடித்­தி­ருக்­கி­றார் பொன்­கு­ம­ரன்.

தீவிர சினிமா ரசி­கர்­க­ளுக்கு இவ­ரைப் பற்றி தெரிந்­தி­ருக்­கும். பிரி­யா­மணி இரண்டு வேடங்­களில் நடித்த ‘சாரு­லதா' படத்தை இயக்­கி­ய­வர். அதன் பிறகு கன்­ன­டத் திரை­யு­ல­கில் பணி­யாற்றி வந்­த­வரை சிறிய இடை­வெ­ளிக்­குப் பிறகு கோடம்­பாக்­கத்­துக்கு அழைத்து வந்­துள்­ள­னர்.

‘கோல்­மால்' படத்­துக்காக இப்­படக்­கு­ழு­வி­னர் பல வாரங்­களுக்கு மொரி­ஷி­யஸ் நாட்டில் முகா­மிட்­டி­ருந்­த­ன­ராம். கொரோனா நெருக்­க­டிக்­குப் பின்­னர் ஒட்­டு­மொத்த உல­க­மும் பர­ப­ரப்­பாக இயங்­கிக் கொண்­டி­ருக்­கிறது. இச்சமயம் சிக்­க­லான கதைக்­க­ளத்­தைக் கையாள்­வ­தில் தமக்கு விருப்­ப­மில்லை என்­கி­றார் பொன்­கு­ம­ரன்.

"அத­னால் எல்­லா­ருக்­கும் பிடிக்­கக்­கூ­டிய எளி­மை­யான கதையை கல­க­லப்­பா­க­வும் குளு­கு­ளு­வென்­றும் காட்­சிப்­ப­டுத்தி உள்­ளோம். முன்­ன­ணிக் கலை­ஞர்­கள் ஒன்று சேர்ந்து உழைத்­தி­ருக்­கி­றோம்.

"யோகி பாபு, மாள­விகா, தான்யா ஹோப், மது சினேகா என்று பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். நீண்ட காலத்­துக்­குப் பிறகு யூகி­சேது நடித்துள்ளார். "சிங்­கம், புலி, சிறுத்தை ஆகி­ய­வற்றை கணி­னித் தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யோடு திரை­யில் காண்­பிக்க விருப்­ப­மில்லை. உண்மையான விலங்கு­களை நடிக்க வைக்­கவே மொரிஷி­யஸ் பறந்­தோம். வெளி­நா­டு­களில் பாடல் காட்­சி­யைப் பட­மாக்­கு­வது என்­றால் அதி­க­பட்­சம் 35 பேர் கொண்ட குழு­வைத்­தான் அழைத்­துச் செல்­வர். ஆனால் நாங்­கள் 120 பேரு­டன் மொரி­ஷி­யஸ் பறந்­தோம். அந்த அள­வுக்­குத் தயா­ரிப்­பா­ளர்­கள் பணத்­தைச் செல­விட்­ட­னர்.”

இரண்டு கதா­நா­ய­கர்­க­ளு­டன் பணி­யாற்­றிய அனு­ப­வம் குறித்து?

"ஜீவா­வும் ‘மிர்ச்சி’ சிவா­வும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் விட்­டுக்­கொடுத்து நடித்­த­னர். யோகி பாபுவை திரை­யில் பார்த்­தால் மட்டு­மல்ல, நேரில் சந்­திக்­கும்­போதும் சிரிக்க வைப்­பார். அவரை ஒரு புலி துரத்­து­வது போன்ற காட்­சி­யைப் பட­மாக்­கி­ய­போது பயந்­து­விட்­டார். அப்­போது அவருக்கு நம்­பிக்கை கொடுப்­ப­தற்­காக புலி­யை­விட வேக­மாக ஓடிக்­காட்­டி­னார் ஜீவா. அதற்கு ‘நீ கதா­நா­ய­கன்பா... வேக­மாக ஓடி­வி­டு­வாய். நான் அப்­ப­டி­யில்­லையே' என்று அவர் சொன்­ன­போது விழுந்து விழுந்து சிரித்­தோம்," என்கிறார் பொன்குமரன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!