திரைத் துளி­கள்

 திரைப்படத் துறையில் கலைஞர்களின் திறமை குறித்து பேசுவதைவிட எனது உருவக்கேலி செய்வதில்தான் பலர் முனைப்பாக உள்ளதாகக் கூறுகிறார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.

ஒருவரது தோற்றம், நிறம், உயரத்தைப் பார்க்காமல் அவர்களிடம் உள்ள திறமைக்கும் நல்ல மனதுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அண்மைய பேட்டியில் அவர் வலியுறுத்தி உள்ளார்.

“அனைவருக்கும் ஏதேனும் கனவுகள், லட்சியங்கள் இருக்கும். முடிந்தால் அவற்றை அடைய உதவி செய்யுங்கள். மாறாக, விமர்சனங்கள் செய்து அவர்களைக் கீழே தள்ளி விடாதீர்கள். சினிமாவில் ஒல்லியாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பட்டினி கிடக்கமாட்டேன். ஒல்லியாக இருப்பதே அழகு என்பதையும் ஏற்கமாட்டேன்,” என்கிறார் சோனாக்‌ஷி.

 கேரளாவைச் சேர்ந்த சொகுசு தங்குவிடுதி உரிமையாளர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் நீண்ட நாள்களாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் பள்ளிக்கால நண்பர்கள் என்று கூறப்படும் நிலையில், இரு தரப்பிலும் இந்தச் செய்தியை மறுக்கவோ ஏற்கவோ இல்லை. எனினும் கீர்த்தி தரப்பில் இருந்து இது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாம்.

 தென்னிந்திய திரையுலகின் மூத்த சண்டைப் பயிற்றுநர் ஜூடோ ரத்னம் காலமானார். அவருக்கு வயது 93. கடந்த 1970 தொடங்கி 1992ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 1,500 படங்களுக்கு சண்டைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியவர் ரத்னம். அவற்றுள் ரஜினி நடித்த 46 படங்கள் அடங்கும். ‘தாமரைக்குளம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘போக்கிரி ராஜா’, ‘தலைநகரம்’ ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்திலும்

அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!