‘என்னை நல்லவனாக மாற்றினார்’

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தயாரிக்கும் ‘சாருகேசி’ திரைப்படத்தின் அறிவிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்தன. என் மனைவி லதா தன்னுடைய அன்பால் என்னைத் திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வந்தார் என்று பெருமையாகப் பேசினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் நெல்சன் இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடந்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் ‘சாருகேசி’ நாடகத்தைக் காண சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அதன் பின்னர் இந்த ‘சாருகேசி’ நாடகம் விரைவில் திரைப்படமாக எடுக்க இருப்பதை பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார் ரஜினிகாந்த். அத்துடன் விழாவில் தனது மனைவி குறித்து கலகலப்பாகப் பேசினார்.

“47 ஆண்டுகளுக்கு முன்னால் ‘ரகசியம் பரம ரகசியம்’ என்ற நாடகத்தைப் பார்க்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. வெகு நேரம் காத்திருந்து அனுமதி இல்லாமல் திரும்பிச் சென்றேன்.

“காலம் ஒருவரை எங்கிருந்து எப்போது எங்கு கொண்டு போகும் என்று யாருக்கும் தெரியாது. அதனைத்தான்’ மகா காலம்’ என்று சொல்வார்கள்.

அப்போது எனக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்காத அதே இடத்தில் இப்போது ‘சாருகேசி’ நாடகத்தின் 50வது விழாவில் தலைமை விருந்தினராக நான் வந்தது காலத்தின் செயல்.

“ஜெயலலிதா, சோ, விசு, நாகேஷ் போன்றவர்கள் ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடகக் குழுவில் இருந்து வந்தவர்கள்தான். அவருக்கு சினிமாவைவிட நாடகம்தான் முக்கியம். பாதுகாப்பும் கண்ணியமும் மிக்க நாடகக் குழுவினராக திகழ்ந்தார்கள்.

“எனது மனைவியை அறிமுகப்படுத்தி வைத்து எனக்கு திருமணம் நடக்க காரணமானவர் ஒய்.ஜி.மகேந்திரன்தான். அதனால் அவருக்கு இந்த விழாவில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

“இது குடும்ப விழா என்பதால் இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். எனக்கு 73 வயது ஆகிறது. ஆனாலும் நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்க காரணம் எனது மனைவி லதாதான்.

“நடத்துனராக வேலை பார்த்தபோது நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்தன. தினமும் அசைவம்தான் சாப்பிடுவேன். குடி, சிகரெட் என கணக்கில்லாமல் எடுத்துக்கொள்வேன். வருமானம் அதிகம் இல்லாமல் நடத்துநராக வேலை பார்த்தபோதே அப்படியென்றால், பணம், புகழ் வரும்போது எப்படி என நீங்களே நினைத்துப் பாருங்கள்.

“காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65தான் சாப்பிடுவேன். அப்போதெல்லாம் சைவப் பிரியர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். எப்படி இதெல்லாம் சாப்பிடுகிறார்கள் என நினைத்ததுண்டு.

“மது, சிகரெட், அசைவம் மூன்றையும் அளவுக்கு மீறி தொடர்ந்து பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டவர்கள் எனக்கு தெரிந்து 60 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்ந்தது கிடையாது.

“இதற்கு நிறைய பேரை என்னால் உதாரணம் சொல்ல முடியும். அந்த அளவுக்கு என்னைப் போகவிடாமல் என்னைத் தன்னுடைய அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா. என்னை ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழவைத்தது அவர்தான்,” என நெகிழ்ச்சியாக பேசினார்.

ரஜினியின் இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!