திரைத்துளிகள்

மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தை இயக்குநர்

ஆர்.கண்ணன் தமிழில் மறுபதிப்பு செய்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் பற்றி ஐஸ்வர்யா கூறுகையில், “மலையாளப் படத்தின் தமிழ் மறுபதிப்பில் நடிக்க வேண்டும் என்று என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். இரண்டு, மூன்று நாள்கள் என் அம்மாவைக் கவனித்தேன். சமையலறைக்குச் செல்வார். வேலை பார்ப்பார். திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். இத்தனை ஆண்டுகளாக நான் இதைக் கவனித்ததே இல்லை. அன்றுதான் இந்தப் படத்தில் நடிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்துவிடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுபோன்ற சிறந்த படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும்,’’ என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா தன்னுடைய 86வது வயதில் ஹைதராபாத்தில் காலமானார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழிலும் ‘மிஸ்ஸியம்மா’, ‘குழந்தையும் தெய்வமும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹைதராபாத்தில் வசித்து வந்த இவர் வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். அவரது மறைவு தமிழ், தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் கோலிவுட்டில் வலம் வந்துகொண்டிருந்தார் மனோபாலா. தற்போது பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மனோபாலாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ‘ஆஞ்சியோ’ சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது ஓய்வில் உள்ளார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‘தளபதி 67’ படத்தில் மனோபாலா முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு குழுவினர் அவர் விரைவில் உடல்நலம் தேறி மீண்டும் விஜய் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!