‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!’

சில மாதங்களாகவே ‘மயோசிடிஸ்’ எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இது அனைவரும் அறிந்த செய்தி.

அவரை வீழ்த்தக் காத்திருந்த ஒரு சிலர் இதுதான் சரியான நேரம் என்று, “சமந்தாவால் இனி எழுந்து நடக்கவே முடியாது,” என்ற புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் சமந்தா உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.

அதைப் பார்த்த அவர் ரசிகர்கள் ‘கம் பேக் சமந்தா’ என்று அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

விரைவில் இவர் நடிப்பில் ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு தற்போது 25 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக ஒரு புதுத் தகவல் வெளிவந்துள்ளது.

நோய் பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக சமந்தா படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை.

அதனால் 12 விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாகவும் அதனால் 25 கோடி ரூபாய் வரை சமந்தாவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ஏற்கெனவே நோயினால் பாதிப்பு அடைந்துள்ள சமந்தாவுக்கு இப்படி ஒரு நஷ்டமா என்று வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!