ஒரு படம்; 4 நாயகர்கள்

கடந்த இரு மாதங்­க­ளாக ‘வாரிசு’, ‘துணிவு’ ஆகிய இரு படங்­கள் குறித்து மட்­டுமே பேசிக்­கொண்­டி­ருந்த தமிழ் ரசி­கர்­கள், அடுத்து வெளி­யீடு காண உள்ள படங்­க­ளின் பக்­கம் தற்போது தங்களின் பார்­வை­யைத் திருப்பி உள்­ள­னர்.

குறிப்­பாக லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கும் ‘விஜய் 67’, விக்­னேஷ் சிவன் இயக்­கும் அஜித்­தின் புதுப் படங்­கள் குறித்த புதுத் தக­வல்­களுக்­காக அவர்­கள் காத்­துக்கிடக்­கின்­ற­னர்.

‘விஜய் 67’ படத்­தின் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை வெளி­யி­டு­வ­தற்­கா­கவே ஒரு நிமி­டம் ஓடக்­கூ­டிய ஒரு காணொ­ளியை உரு­வாக்கி வரு­கி­றா­ராம் லோகேஷ். இதற்­கான படப்­பி­டிப்பை காஷ்­மீர், கொடைக்­கா­னல், சென்­னை­யில் உள்ள பிர­சாத் ஸ்டூ­டியோ ஆகிய இடங்­களில் நடத்தி உள்­ள­னர்.

அந்ந விளம்­ப­ரக் காணொ­ளி­யின் உள்­ள­டக்­கம் குறித்து இது­வரை எந்­த­வி­த­மான தக­வலும் வெளி­யா­க­வில்லை. இந்­நி­லை­யில் விஜய் பேசும் அதி­ரடி வச­னம் ஒன்று அதில் இடம்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

“ஒரு மேசை மீது நிறைய இனிப்­பு­கள் அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கும். அதைக் காட்­டும் கேமரா, மெல்ல கீழ்­நோக்கி நக­ரும். அப்­போது மேசைக்­குக் கீழே அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கும் கத்­தி­களும் பயங்­கர ஆயு­தங்­களும் மிரள வைக்­கும்.

“பின்­னர் ஒரு கட்­ட­டத்­தில் இருந்து நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் அல­றி­ய­டித்­துக் கொண்டு வெ­ளியே ஓடி வரு­வார்­கள். அப்­போது அதி­ர­டி­யான பின்­னணி இசை ஒலிக்­கும்,” என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

காணொ­ளி­யின் முடி­வில்­தான் விஜய் பேசும் ‘பஞ்ச்’ வச­னம் இடம்­பெற்­றுள்­ள­தாம்.

இதற்கு முன்பு லோகேஷ் கன­க­ராஜ், கமல் கூட்­ட­ணி­யில் உரு­வான ‘விக்­ரம்’ படத்­துக்­கும் இதே­போன்ற ஒரு விளம்­பர காணொளி வெளி­யா­னது. அதில் ‘ஆரம்­பிக்­க­லாங்­களா?’ என்று கமல் ரசி­கர்­க­ளைப் பார்த்து கேட்­பார். இந்­தக் காணொ­ளிக்கு கமல் ரசி­கர்­கள் மட்­டு­மல்­லா­மல் அனைத்­துத் தரப்பு ரசி­கர்­க­ளி­டம் இருந்து பெரும் வர­வேற்பு கிடைத்­தது.

எனவே, ‘விஜய் 67’ படத்­துக்­கும் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்­கும் மேல் செல­விட்டு காணொ­ளியை உரு­வாக்­கு­கி­றா­ராம் லோகேஷ்.

இதற்­கி­டையே, லோகேஷ் கன­க­ரா­ஜுக்கு என தனி ரசி­கர்­கள் கூட்­டம் உரு­வாகி வருகிறது.

‘விஜய் 67’ படத்­துக்­குப் பிறகு அவர் வேறு கதா­நா­ய­கர்­க­ளைத் தேட வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­றும் தனது முந்­தைய படங்­களில் நடித்­துள்ள நாய­கர்­களை வைத்தே அவர் மேலும் நான்­கைந்து படங்­களை இயக்­கி­விட முடி­யும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அந்த வகை­யில், தான் இயக்­கும் பிரம்­மாண்ட­மான படத்­தில் விஜய், கமல், கார்த்தி, சூர்யா ஆகிய நான்கு பேரும் நடித்­தால் பொருத்­த­மாக இருக்­கும் என்­கி­றார் லோகேஷ்.

‘கைதி’, ‘விக்­ரம்’ படங்­க­ளுக்கு இடையே ஒரு தொடர்பை திரைக்­க­தை­யின் உத­வி­யோடு ஏற்படுத்தி இருந்­தார் லோகேஷ். அதே­போல் விஜய் படத்­தை­யும் தனது முந்­தைய படங்­களோடு இணைக்க அவர் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல்.

“எனவே, நான்கு நாய­கர்­களை வைத்து படம் இயக்­கும்­போது அவர்­க­ளு­டைய கதா­பாத்­தி­ரம் குறித்து ரசி­கர்­க­ளுக்கு விளக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நேர­டி­யாக கதைக்­க­ளத்­துக்­குள் ரசி­கர்­க­ளைக் கொண்டு செல்ல முடி­யும். இரண்டு பாகங்­க­ளா­கக்­கூட அந்த பிரம்­மாண்­டப் படத்தை உரு­வாக்க முடி­யும்,” என்று கோடம்­பாக்க விவ­ரப்­புள்­ளி­கள் கூறு­கின்­ற­னர்.

மேலும், நான்கு நாய­கர்­கள் நடிப்­ப­தால் வசூல் நன்­றாக இருக்­கும் என்­றும் செலவு குறித்து யோசிக்க வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

‘விஜய் 67’ படத்­துக்கு கிடைக்­கும் வர­வேற்­பைப் பொறுத்தே தனது அடுத்த படங்­கள் குறித்து லோகேஷ் கன­க­ராஜ் முடி­வெ­டுப்­பார் என்று தெரி­கிறது.

இதற்­கி­டையே, ‘விஜய் 67’ படம் குறித்த சில முக்­கிய அறி­விப்­புகளை பிப்­ர­வரி முதல் வாரத்­தில் அவர் வெளி­யி­டு­வார் என எதிர்­பார்க்கப்­ப­டு­கிறது.

, :

தமிழகத்  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!