திரைத் துளி­கள்

 தனது மறுமணம் குறித்து பிறர் முடிவு செய்வதை நினைத்தால் சிரிப்பு வருகிறது என்கிறார் சோனியா அகர்வால். இன்னும் எத்தனை நாள்களுக்குத் தனிமை வாழ்க்கை நீடிக்கும் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார். “இணையத் தொடரில் நானும் எஸ்.பி.பி.சரணும் இணைந்து நடித்தோம். அதை வைத்து எனக்குத் திருமணமாகிவிட்டதாக கதைகட்டிவிட்டனர். எனது தனிமை எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. எனினும் பொருத்தமான ஒருவரை சந்திக்கும்போது மறுமணம் குறித்து யோசிப்பேன். இதுவரை அப்படிப்பட்ட ஒருவரை சந்திக்கவில்லை,” என்கிறார் சோனியா.

 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்பட விழாவில் ஊர்வசி நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய ‘அப்பத்தா’ என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட உள்ளது. இது ஊர்வசி நடித்துள்ள 700வது படமாகும். பெற்றோருக்கு பிள்ளைகள் தர வேண்டிய மரியாதை, அவர்களுடனான பிணைப்பின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறது இப்படம். ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்தப் படம் பங்கேற்பது பெருமை அளிப்பதாக உள்ளது என்கிறார் பிரியதர்ஷன்.

 பொங்கல் தினத்தை முன்னிட்டு தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை இன்ஸ்டகிராம் தளத்தில் பதிவிட்டிருந்தார் சிவ கார்த்திகேயன். அந்த புகைப்படத்திற்கு 23 லட்சம் ‘லைக்கு’கள் கிடைத்துள்ளன. தனது மனைவி, மகன், மகளுடன் அவர் சிரித்தபடி காட்சியளிக்கும் அந்தப் புகைப்படம் மிக அழகாக இருப்பதாக ஏராளமானோர் பின்னூட்டமிட்டுள்ளனர். மேலும், தமிழ் சினிமா பிரபலங்களில் வேறு எந்த நடிகரின் புகைப்படத்தையும் இத்தனை பேர் விரும்பிப் பார்த்ததில்லை என்று சிவாவின் ரசிகர்கள் கூறுகின்றனர்.

 தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதாக வெளி யான தகவலை மறுத்துள் ளார் ராஷ்மிகா மந்தனா. இதுபோன்ற தகவல்களைப் பரப்புவது தவறு என்றும் தனது தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து மற்றவர்கள் கருத்து சொல்ல உரிமையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 அண்மையில் வெளியீடு கண்ட `நாய்சேகர்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார் சதீஷ். இப்போது மீண்டும் புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கும் இந்தப் படத்தில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!