‘குற்றம் புரிந்தால்’ என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் மாற்றுத்திறனாளியான அபிநயா.
டிஸ்னி இயக்கும் இந்தப் படத்தில் ஆதிக் பாபு நாயகனாகவும் இன்னொரு நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த அர்ச்சனாவும் நடிக்கின்றனர்.
“கதாநாயகனின் குடும்பத்தார் ஒரு மர்மக் கும்பலால் கொல்லப்படுகின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் அவன், சட்டத்தை தன் கைகளில் எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க திட்டமிடுகிறான். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனரா என்பது கதை.
“இதில் காதல், நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர்.
“குற்றவாளிகளைப் பழிவாங்கத் துடிக்கும் நாயகனை விரட்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறேன். இப்படம் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல் கல்லாக இருக்கும்,” என்கிறார் அபிநயா.