சில காலம் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வந்த நடிகை சாந்தினி மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பி உள்ளார்.
‘நாளைய இயக்குநர்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிரகாஷ் இயக்கும் படம் ‘குடி மகான்’.
சாந்தினி நாயகியாகவும் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது ஆகியோர் முக்கியப் பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
“மதுவை மையப்படுத்தி கதையை உருவாக்கி உள்ளோம் என்றாலும் எந்த இடத்திலும் மது பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக காட்சிகளோ வசனங்களோ இருக்காது,” என்கிறார் இயக்குநர் பிரகாஷ்.
“நாம் அனைவருமே ஏதாவது ஒரு நாட்டின் குடிமகனாக இருப்போம். அதேசமயம் மது அருந்துவோரையும் குடிமகன் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு குடிமகன், குடிமகானாக இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கோணத்தில் இந்த கதை உருவாகியுள்ளது,” என்கிறார் சாந்தினி.
‘சித்து பிளஸ் 2’ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள சாந்தினி, சிறு முதலீட்டு படங்களின் ஆஸ்தான நாயகியாக வலம் வந்தார்.