ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'ரன் பேபி ரன்' திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காண உள்ளது.
இப்படத்தில் நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், "நான் படங்களில் நடிப்பது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லுவேன். திரைத்துறையில் நான் இந்த அளவுக்கு வந்துள்ளதே எனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதமாகத்தான் உணர்கிறேன்.
"திரையுலகில் நுழைய நான் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. என் வானொலி வேலையை மட்டும் நேர்மையாகச் செய்து கொண்டிருந் தேன். அதற்கு கிடைத்த கூடு தல் ஊக்கப் பரிசுகள்தான் இவ்வாய்ப்புகள் எல்லாம். திரையுலகில் கிடைத்துள்ள இடத்தை சரியான முறையில் தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக உள்ளேன்.
"அதனால் சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்ட யாரையும் நான் போட்டியாக நினைக்கவில்லை. நான் ஓர் ஓரமாக ஓடுகிறேன். அந்த ஓட்டத்தை நீண்ட நாள்களுக்குத் தொடரும் பேராசையும் உள்ளது," என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி நடித்திருந்த 'வீட்ல விசேஷம்' படக்காட்சி.
, :
தமிழகத்

