உண்மை போட்டுடைத்த தாய்

நடிகை கீர்த்தி சுரேஷ் (படம்) கடந்த 13 ஆண்­டு­க­ளாக தன் பள்­ளித் தோழ­னைக் காத­லித்து வரு­வ­தாக ஊட­கங்­களில் செய்­தி­கள் பர­விய நிலை­யில், அது­கு­றித்து அவ­ரது தாய் மேனகா சுரேஷ் விளக்­கம் அளித்­துள்­ளார்.

“இது முழுக்க முழுக்­கப் பொய்­யான செய்தி. இது­போன்ற செய்­தி­யைப் பார்க்­கவோ, படிக்­க­வோ­கூட நான் விரும்­ப­வில்லை. இவ்விவ­கா­ரம் குறித்து மேலும் பேசு­வ­தற்கு எது­வும் இல்லை,” என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தென்­னிந்­தி­யத் திரை­யு­ல­கில் முன்­னணி நடிகை­யாக வலம் வரு­ப­வர் கீர்த்தி சுரேஷ். இவ­ரது நடிப்­பில் தற்­போது தமி­ழில் ‘சைரன்’, ‘மாமன்­னன்’, ‘ரகு­தாதா’, ‘ரிவால்­வர் ரீட்டா’ உள்­ளிட்ட படங்­களும் தெலுங்கில் ‘போலா சங்­கர்’, ‘தசரா’ போன்ற படங்­களும் தயா­ராகின்­றன. இப்­படங்­களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் குறித்து அவ்­வப்­போது காதல் வதந்­தி­கள் பரவு­கிறது.

அண்­மை­யில், கீர்த்தி சுரேஷ் தன் பள்­ளித் தோழ ரான கேர­ளா­வைச் சேர்ந்த ‘ரிசோர்ட்’ உரி­மை­யா­ளர் ஒரு­வரை கடந்த 13 ஆண்­டு­க­ளா­கக் காதலித்து வரு­வ­தா­க­வும் இரு­வ­ரது வீட்­டி­லும் திரு­ம­ணத்­துக்கு சம்­ம­தம் தெரி­வித்­ததை அடுத்து, ஒரு சில மாதங்­களில் திரு­ம­ணம் நடை­பெற உள்­ள­தா­க­வும் சமூக வலைத்­த­ளங்­களில் செய்­தி­கள் பர­வின.

ஏற்­கெ­னவே கீர்த்தி சுரே­ஷும் இசை­ய­மைப்­பா­ளர் அனி­ருத்­தும் காத­லிப்­ப­தாக தக­வல் பர­வி­ய­தோடு, இரு­வ­ரும் ஜோடி­யாக எடுத்­துக்­கொண்ட புகைப்­படங்­களும் வெளிவந்தன.

பின்­னர் அவர்­கள் இரு­வ­ரும் நெருங்­கிய நண்­பர்­கள் என அவர்­க­ளது பெற்­றோர் விளக்­கம் அளித்­ததைத் தொடர்ந்து, அந்­தக் காதல் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்­தது.

இந்­நி­லை­யில், 13 ஆண்டு கால காதல் வதந்­திக்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளார் கீர்த்­தி­யின் தாயார் மேனகா சுரேஷ்.

இதே­போல், மற்­றொரு நடி­கை­யான ராஷ்­மிகா மந்­த­னா­வும் காதல் குறித்­தான தன் எண்­ணங்­களை திரைச்­செய்தி ஊட­கங் களி­டம் மனம்­தி­றந்து பகிர்ந்­து­கொண்­டுள்­ளார்.

“நம்­மை­விட இளை­ய­வ­ரைக் காத­லிப்­ப­தில் தவ­றில்லை. காத­லுக்கு வயது, மொழி என எது­வும் தடை­யல்ல. நம் மன­துக்­குப் பிடித்­த­வர் நம்­மி­டம் ஆதிக்­கம் செய்­யா­த­வ­ராக, நம்மை சுதந்­தி­ர­மா­கச் செயல்­பட விடு­ப­வ­ராக, நகைச்­சுவை குணம் உள்­ள­வ­ராக இருந்­தால் போதும். நம் மனம் போல் பிடித்­த­வ­ரு­டன் வாழ்க்கை அமைந்­து­வி­டும்,” என்­றார்.

‘பார்ட்டி’, ‘பப்’ போன்ற இரவு கேளிக்கை நிகழ்­வு­க­ளுக்­குச் செல்­லும் பழக்­கம் இல்லை என்­றும் இரவு தாம­த­மாக தூங்கு­வ­தற்கு ஓடி­டி­தான் கார­ணம் என்­றும் ஏதா­வது இணை­யத் தொடர்­க­ளைப் பார்த்­தால் அது முடி­யும்­வரை தூங்­கச் செல்­ல­மாட்­டேன் என்­றும் சொல்­கி­றார் ராஷ்­மிகா.

தமி­ழில் கார்த்தி ஜோடி­யாக ‘சுல்­தான்’ படத்­தில் அறி­மு­க­மான ராஷ்­மிகா, ‘வாரிசு’ படத்­தில் விஜய் ஜோடி­யாக நடித்த மகிழ்ச்­சி­யில் உற்­சா­க­மா­கக் காணப்­படு­கி­றார். இவர், தெலுங்கு, இந்­திப் படங்­க­ளி­லும் நடித்து வரு­கி­றார்.

தனது உண­வு­மு­றை­கள் குறித்­தும் ராஷ்­மிகா தெரி­வித்­துள்­ளார். “எனக்கு காலைச் சிற்­றுண்­டி­யில் ‘ஆம்­லெட்’ இருக்­க­வேண்­டும். உண­வில் காய்­க­றி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுப்­பேன்.

“அரிசி சாதம் குறை­த்துச் சாப்­பி­டு­வேன். தோசை மிக­வும் பிடிக்­கும். மதியம் சூடான ரசத்­து­டன் சாதம் கலந்து ஒரு பிடி­பி­டிப்­பேன். தென்­னிந்­திய ‘தாளி’க்கு முக்கியத்துவம் கொடுப்­பேன்.

“இரவு உணவு கொஞ்­சம்தான். சர்க்­கரை வள்­ளிக் கிழங்கு, தக்­காளி சேர்த்­துக்­கொள்­வேன். எல்லா விஷ­யங்­க­ளி­லும் ஒழுக்­க­மாக இருக்­கும் நான், சீக்­கி­ரம் தூங்கி சீக்கிரம் எழு­வதை மட்­டும் இன்­னும் பழக்­கப்­ப­டுத்­திக் கொள்­ள­வில்லை. படப்­பி­டிப்பு நாள்களில் மட்­டும் காலை­யி­ல் எழுந்து ஏழு மணிக்கு எல்­லாம் படப்­பி­டிப்­புத் தளத்­தில் இருப்­பேன்,’’ என்­கி­றார் ராஷ்மிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!