சாத்தூர் பெண் ஷிவானி

சாத்தூர் பெண் ஷிவானி

3 mins read
daa47b17-0172-41f4-9bf4-c6872daa7960
-

'பிக் பாஸ்' போட்­டி­யில் பங்­கேற்ற பிறகு ஷிவானி நாரா­ய­ணனை அடுத்­த­டுத்த புதுப்­ப­டங்­களில் பார்க்க முடி­கிறது. சிறிய கதா­பாத்­தி­ரம் என்­றா­லும் விஜய்­யின் 'விக்­ரம்' படம் ரசி­கர்­க­ளின் பார்­வையை ஷிவானி பக்­கம் திருப்­பி­யது. தற்­போது 'பம்­பர்' படத்­தில் நாய­கி­யாக நடித்து வரு­கி­றார்.

அறி­முக இயக்­கு­நர் செல்­வ­கு­மார் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் இப்­ப­டத்­தில் வெற்றி நாய­க­னாக நடிக்­கி­றார்.

"லாட்­ட­ரிச் சீட்டு மூலம் திடீர் பணக்­கா­ரர்­க­ளாக மாறி­ய­வர்­கள் இந்­தி­யா­வில் மட்­டு­மல்ல, உல­கெங்­கும் இருக்­கி­றார்­கள். 'விழுந்­தால் வீட்­டுக்கு, விழா­விட்­டால் நாட்­டுக்கு' என்ற வாச­கத்­து­டன் கடந்த காலங்­களில் தமிழ்­நாட்­டி­லும் லாட்­ட­ரிச் சீட்டு விற்­பனை அமோ­க­மாக நடந்­தது.

"இப்­போது லாட்­ட­ரிச் சீட்டு விற்­பனை தமிழ்­நாட்­டில் தடை­செய்­யப்­பட்­டி­ருந்­தா­லும் கேரளா, வட­கி­ழக்கு மாநி­லங்­கள் எனப் பல்­வேறு பகுதி­களில் இன்­ற­ள­வும் லாட்­ட­ரிச் சீட்டு விற்­பனை அமோ­க­மாக நடந்து வரு­கிறது.

"அப்­படி, அதிர்ஷ்­டத்­தின் முக­வரி­யான லாட்­ட­ரிச் சீட்டை மைய­மாக வைத்து உரு­வா­கி­யுள்­ளது 'பம்­பர்' படம்," என்­கி­றார் இயக்­கு­நர் செல்­வ­கு­மார்.

இவ­ரும் முன்­னாள் லாட்­டரி வியா­பாரி என்­பது சுவா­ர­சி­யத் தக­வல்.

கொரோனா நெருக்­க­டிக்கு முன்பே 'பம்­பர்' படத்­தின் கதையை முழு­மை­யா­கத் தயார் செய்­து­விட்­டா­ராம். சில முன்­னணி கதா­நா­ய­கர்­களை நேரில் சந்­தித்து கதை சொல்லி இருக்­கி­றார். அவர்­களில் வெற்­றி­யும் ஒரு­வர். எனி­னும், கொரானா நெருக்­க­டி­யின்­போது அடுத்­தக்­கட்­டத்­துக்­குச் செல்ல முடி­யா­மல் போன­தாம்.

"மீண்­டும் முயற்சியைத் தொடங்­கி­ய­போது, வெற்றி என்னை மறக்­கா­மல் தொடர்பு கொண்­டார். அவ­ரது உதவி­யோடு தயா­ரிப்­பா­ளர் தியா­க­ரா­ஜா­வின் அறி­மு­கம் கிடைத்­தது.

"பணம்­தான் வாழ்க்கை என எல்­லா­வற்­றை­யும் பணத்­தைச் சுற்­றியே அமைத்­துக் கொள்­கி­றோம். இந்­தக் கதை­யில் மனித அறத்­து­டன் வாழும் ஒரு­வன், அறமே இல்­லாத ஒரு மனி­தன் என இரு­வ­கை­யான கதா­பாத்­தி­ரங்­க­ளைக் காண்­பீர்­கள். அவர்­களு­டைய வாழ்க்­கை­யில் நடக்­கும் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பு­தான் 'பம்­பர்' படம்," என்­கி­றார் இயக்­கு­நர் செல்­வ­கு­மார்.

கமல்­ஹா­ச­னின் 'விக்­ரம்' படத்­தைப் பார்த்த பிற­கு­தான் நாய­கி­யாக ஷிவா­னியை நடிக்க வைக்­க­லாம் என முடிவு செய்­யப்­பட்­ட­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், வட­இந்­தி­யப் பெண்­ணைப்­போல் அவர் காட்­சி­ய­ளித்­தது சற்றே யோசிக்க வைத்­த­தா­கச் சொல்­கி­றார்.

"விஜய் சேது­ப­தி­யின் இணை­யாக 'விக்­ரம்' படத்­தில் ஷிவானி நடித்­தி­ருந்­தார். சில காட்­சி­கள்­தான் என்­றா­லும் மன­நி­றைவு தரும் நடிப்பு. எனி­னும் வட­இந்­தி­யப் பெண்­ணைப் போல் இருக்­கி­றாரே என்று யோசித்­தேன்.

"ஆனால் புகைப்­ப­டத்­தில் பார்க்­கும்­போது தான் அது­போன்ற சாயல் தெரிந்­தது. உண்­மை­யில் அவ­ரது சொந்த ஊர் தமி­ழ­கத்­தில் உள்ள சாத்­தூர். நேரில் சந்­தித்­த­போது இதை தெரி­வித்­தார்.

"என்­ன­தான் தொலைக்­காட்­சி­யில் அவர் தமி­ழில் பேசு­வதைப் பார்த்­தி­ருந்­தாலும், நேர­டிச் சந்­திப்­பின்­போது அவர் சர­ள­மா­கப் பேசி­யது உற்­சா­கம் அளித்­தது. எனது கதை­யின் நாய­கி­யாக சிறப்­பாக நடிப்­பார் என்ற நம்­பிக்­கை­யும் ஏற்­பட்­டது.

"கதைப்­படி அவர் நெல்லை பகு­தி­யைச் சேர்ந்த பெண்­ணாக வரு­கி­றார். அவ­ரால் நெல்லை பெண்­க­ளுக்­கு­ரிய உடல் மொழியை, உச்­ச­ரிப்பை திரை­யில் கொண்டு வர முடி­யுமா என்ற சந்­தே­கம் இருந்­தது. ஆனால் எனது எதிர்­பார்ப்­பு­களை மீறி மிக நேர்த்­தி­யாக நடித்­தார். வச­னங்­களை வெறு­மனே மனப்­பா­டம் செய்து ஒப்­பிக்­கா­மல், காட்­சி­க­ளின் தன்­மைக்கு ஏற்ப அவர் நடித்­த­தைப் படப்­பி­டிப்­பின்­போதே பல­முறை பாராட்­டி­னேன்," என்­கி­றார் செல்­வ­கு­மார்.

படத்­தின் நாய­கன் வெற்­றி­யின் ஒத்­து­ழைப்பை வார்த்­தை­களில் விவ­ரிக்க இய­லாது என்று பாராட்­டு­ப­வர், புலிப்­பாண்டி என்ற கதா­பாத்­தி­ரத்­து­டன் அவர் கச்­சி­த­மா­கப் பொருந்­தி­விட்­ட­தா­கக் குறிப்­பி­டு­கி­றார்.

"எவ்­வ­ளவு மோச­மான மனி­த­னாக இருந்­தா­லும் அவனுக்­குள்­ளும் அறம் இருக்­கும் என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதைக்­கரு. இதை அனைத்து கதா­பாத்­தி­ரங்­களும் நன்கு உள்­வாங்கி, இயல்­பாக நடித்­தால்­தான் படம் வெற்­றி­பெ­றும்.

"வெற்­றி­யைப் பொறுத்­த­வரை தமிழ்­சி­னிமா ரசி­கர்­களுக்கு நன்கு அறி­மு­க­மான நாய­கன். ஒவ்­வொரு படம், கதா­பாத்­தி­ரத்­தின் வெற்­றிக்­காக கடு­மை­யாக உழைக்­கி­றார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று பேசுகிறார் இயக்குநர் செல்வகுமார்.