கையில் காப்புடன் விஜய்: லோகேஷ் வெளியிட்ட படம்

கையில் காப்புடன் விஜய்: லோகேஷ் வெளியிட்ட படம்

1 mins read
ea1c63b2-bf2d-45e7-ab66-ae7a6074436e
-

'தள­பதி 67' படம் குறித்த புதுத் தக­வல்­க­ளுக்­காக ரசி­கர்­க­ளைப் போலவே திரை­யு­ல­கத்­தி­ன­ரும் ஆர்­வ­மா­கக் காத்­துக்­கி­டக்­கின்­ற­னர். இந்­நி­லை­யில், அப்­ப­டத்­தின் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ் வெளி­யிட்­டுள்ள புகைப்­ப­டம் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது.

'தள­பதி 67' படத்தை லலித்­குமார் தயா­ரிக்க உள்­ள­தாக அவ­ரது செவன் ஸ்கி­ரீன் ஸ்டூ­டி­யோ நிறு­வ­னத்­தின் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு தெரி­விக்­கிறது.

'மாஸ்­டர்', 'வாரிசு' ஆகிய படங்­களை அடுத்து மூன்­றா­வது முறை­யாக விஜய்­யு­டன் இணை­வ­தில் மிகுந்த மகிழ்ச்சி என படத்­த­யா­ரிப்பு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

மேலும், நடி­கர் விஜ­ய்யின் மேலா­ள­ரான ஜெக­தீஷ் பழனி­சாமி இப்­ப­டத்­தின் இணை தயாரிப்­பா­ள­ராக இணைந்­துள்­ளார். இசை­ய­மைப்­பா­ள­ராக அனி­ருத், ஒளிப்­ப­தி­வா­ள­ராக மனோஜ் பர­ம­ஹம்சா உள்­ளிட்ட தொழில்­நுட்ப கலை­ஞர்­கள் ஒப்­பந்­த­மாகி உள்­ள­னர்.

இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு ஜன­வரி 2ஆம் தேதி தொடங்­கிவிட்­டது என்­றும் வரும் நாள்­களில் இப்­ப­டத்­தில் இணை­யும் மற்ற கலை­ஞர்­கள் குறித்த தக­வ­லும் காணொ­ளிப் பதி­வு­களும் வெளி­யா­கும் என தயா­ரிப்­புத் தரப்பு கூறி­யுள்­ள­து.

இதற்­கி­டையே, சமூக வலைத்­தளங்­களில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்த லோகேஷ், விஜய்­யு­டன் இருக்­கும் புகைப்­படத்தை வெளி­யிட்­டுள்­ளார். அதில் விஜய் தனது கையில் காப்­பு­டன் காணப்­ப­டு­கி­றார். எனவே இது அதி­ரடி சண்­டைக் காட்­சி­க­ளைக் கொண்ட பட­மாக உரு­வா­கும் என எதிர்­பார்ப்­ப­தாக ரசி­கர்­கள் தெரிவித்துள்ளனர்.