ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெரோஃப் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் 'பிகில்' படத்தை அடுத்து ஜாக்கி ஷெரோஃப்பும் 'ஜெயிலர்' குழு வில் இணைந்துள்ளார் என்றும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளி யாகும் என்றும் கூறப்படுகிறது.
ரஜினியும் ஜாக்கி ஷெரோஃப்பும் 1987ல் வெளியான 'உத்தர் தக்ஷின்' என்ற இந்திப் படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிக்கப் போவ தாகக் கூறியுள்ளார் ஹன்சிகா. அதுமட்டுமல்ல, இந்தாண்டு அவரது நடிப்பில் ஏழு படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன. இதைவிட வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயம் இருக்கமுடியாது என்கிறார்.
நேற்று முன்தினம் மும்பையில் இருந்து சென்னை திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஒரு மாதத்துக்கு தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.
"தாய் வீட்டுக்குத் திரும்பும் போது எத்தகைய உணர்வு ஏற்படுமோ, அதை இப்போது உணர்கிறேன். சென்னை எனக்கு எப்போதுமே தாய் வீடுதான். தற்போது நந்த கோபால் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இப்படம் உட்பட நடப்பாண்டில் நான் நடித்துள்ள ஏழு படங்கள் வெளியீடு காண உள்ளன. அந்தவகையில் இது அதிர்ஷடமான ஆண்டு என்பேன். மணவாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது
"இன்றைய காலத்தில் அனைவரும் சமம். திருமணத்துக்குப் பிறகு கையில் அணிந்துள்ள மோதிரம்தான் மாறி உள்ளது," என்றார் ஹன்சிகா.
'சந்திரமுகி 2' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் கங்கனா ரணவத். பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் தான் நாயகன். இப்படத்தின் இறுதிக்காட்சி யில் இடம்பெறும் பாடலுக் கான நடன ஒத்திகை தொடங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் கங்கனா.

