ரம்யா: இழந்தது கிடைத்தது

ரம்யா: இழந்தது கிடைத்தது

3 mins read
e73d4e01-c337-42cb-ba9c-8e4822079664
கல்­லூ­ரி­யில் படித்­த­போது தமக்கு திரைப்­பட நடி­கை­யாக வேண்­டும் என்ற எண்­ணம் அறவே இல்லை என்­கி­றார் ரம்யா. படம்: ஔட்லூக் இந்தியா -

சமூக ஊட­கங்­களில் ரம்யா பாண்­டி­ய­னுக்கு என தனி ரசி­கர் கூட்­டம் உள்­ளது. அவ­ரது ஒவ்­வொரு பதி­வை­யும் அவர் பகி­ரும் புகைப்­ப­டங்­க­ளை­யும் ஏரா­ள­மா­னோர் ரசித்­துப் பார்த்து பாராட்­டு­கி­றார்­கள்.

கல்­லூ­ரி­யில் படித்­த­போது தமக்கு திரைப்­பட நடி­கை­யாக வேண்­டும் என்ற எண்­ணம் அறவே இல்லை என்­கி­றார் ரம்யா. அதே­ச­ம­யம் குறும் படங்­களில் நடிப்­பது, கல்­லூரி நிகழ்ச்­சி­களை தொகுத்து வழங்­கு­வது ஆகி­ய­வற்­றில் மிகுந்த ஆர்­வம் இருந்­த­தாம்.

"பள்ளி, கல்­லூரி நாள்­களில் படிப்­ப­தைத் தவிர நிறைய நிகழ்ச்­சி­களில் பங்கேற்பேன். பாடு­வது, நட­ன­மா­டு­வது, நிகழ்ச்­சித் தொகுப்பு என்று ஏதா­வது ஒரு நிகழ்­வில் என்­னைப் பார்க்க முடி­யும்.

"அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்­ட­போது, திரை­யு­ல­கப் பிர­ப­லங்­களை பல்­கலை நிகழ்ச்­சிக்கு அழைத்து வரு­வ­தைப் பெரு­மை­யா­கக் கரு­து­வோம். அந்­தச் சம­யத்­தில் 'வில்லு' படம் வெளி­யீடு கண்­டது. மாண­வர்­கள் மத்­தி­யில் அந்­தப் படம் குறித்து அதி­கம் பேசப்­பட்­டது.

"எப்­ப­டியோ முயற்சி செய்து விஜய், அருண் பாண்­டி­யன் ஆகிய இரு­வ­ரை­யும் நிகழ்ச்­சிக்கு வர­வ­ழைத்­தோம். அந்த நிகழ்வை நான்­தான் தொகுத்து வழங்­கி­னேன்.

"எனி­னும் நான் திரை­யு­ல­கில் நடி­கை­யாக அறி­மு­க­மாக இது­தான் கார­ணம் என்று சொல்ல முடி­யாது. உண்­மை­யா­கவே கல்­லூரி நாள்­களில் திரை­யு­ல­கில் பணி­யாற்­று­வது குறித்து நினைத்­துக்­கூ­டப் பார்த்­த­தில்லை," என்­கி­றார் ரம்யா.

'ஜோக்­கர்', 'ஆண் தேவதை', 'ராமே ஆண்­டா­லும் ராவணே ஆண்­டா­லும்' என நல்ல படங்­களில் நடித்­தி­ருந்­தா­லும் 'பிக்­பாஸ்', 'குக் வித் கோமாளி' போன்ற சின்­னத்­திரை நிகழ்ச்­சி­கள் மூலம்­தான் ரசி­கர்­க­ளி­டம் ரம்யா நன்கு அறி­மு­க­மாகி உள்­ளார். கல்­லூரி நாள்­களில் சில குறும்­ப­டங்­களில் நடித்­துள்­ளா­ராம்.

"புகைப்­ப­டங்­களில் நான் அழ­காக காட்­சி­ய­ளிப்­ப­தாக சில நண்­பர்­கள் சொல்­லிக்­கொண்டே இருந்­த­னர். அப்­போது ஒரு நண்­பர் குறும்­ப­டத்­தில் நடிக்க இய­லுமா என்று கேட்­டார். நட்­புக்­காக சம்­ம­தித்­தேன்.

"அந்தக் குறும்­ப­டத்­தில் நடித்து முடிப்­ப­தற்­குள் ஒரு வேலை­யில் சேர்ந்­து­விட்­டேன். படப்­பி­டிப்­பின்­போது குறிப்­பிட்ட ஒரு காட்­சி­யில் நான் வாய்­விட்­டுக் கதறி அழ வேண்­டும் என்­றார் இயக்­கு­நர். அந்­தச் சம­யத்­தில் கண்­களில் 'கிளி­ச­ரின்' போட்­டுக்­கொண்­டால் அழுகை வரும் என்­ப­தெல்­லாம் தெரி­யாது. மன­தில் எதையோ நினைத்­துப் பார்த்து அழு­தேன். எல்­லா­ருக்­கும் வியப்பு. பாராட்­டு­க­ளுக்கு மத்­தி­யில் அந்­தக் குறும்­ப­டத்தை திரை­யில் பார்த்­த­போது எனது நடிப்பு என்­னை­யும் வியக்க வைத்­தது. நாமும் ஏன் நடி­கை­யா­கக் கூடாது என்ற எண்­ணத்தை அந்­தக் குறும்­ப­டம் என் மன­தில் விதைத்­தது," என்­கி­றார் ரம்யா.

தற்­போது மலை­யாள இயக்­கு­நர் லிஜோ ஜோஸ் பெல்லி செரி­யின் இயக்­கத்­தில் மம்­மூட்­டிக்கு ஜோடி­யாக 'நண்­ப­கல் நேரத்து மயக்­கம்' என்ற படத்­தில் நடித்து முடித்­துள்­ளார்.

"முன்பு 'ஜோக்­கர்' படத்­தில் எனது நடிப்­பைப் பார்த்த மம்­முட்டி எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்­டும் என்று முடிவு செய்­தி­ருக்­கி­றார். ஆனால் அவர் திட்­ட­மிட்­டி­ருந்த படத்­தில் எனக்­குப் பதி­லாக 'ஜோக்­கர்' படத்­தின் இன்­னொரு நாய­கி­யான காயத்­ரியை ஒப்­பந்­தம் செய்­து­விட்­ட­னர். அந்த நல்ல வாய்ப்பை நான் இழந்­து­விட்­ட­தாக நேரில் சந்­தித்­த­போது சொன்­னார்.

"இப்­போது மீண்­டும் நல்ல வாய்ப்பு தேடி வந்­துள்­ளது. எனக்­குப் பதி­லாக வேறு முன்­னணி நாய­கியை ஒப்­பந்­தம் செய்­தி­ருக்­க­லாமே என்று படத்­தின் இயக்­கு­ந­ரி­டம் கேட்­டேன். அதற்கு நான்­தான் நாயகி கதா­பாத்­தி­ரத்­துக்­குப் பொருத்­த­மாக இருப்­பேன் என்று அவர் கூறி­னார்.

"இந்த 'நண்­ப­கல் நேரத்து மயக்­கம்' படத்­தில் மம்­முட்­டின் மனை­வி­யாக நடிக்­கி­றேன். அதிக வச­னங்­கள் இல்லை. பெரும்­பா­லும் முக பாவங்­கள் மூலம் உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது.

"மம்­முட்டி போன்ற மூத்த கலை­ஞர்­க­ளு­டன் நடிப்­பது பெரிய வாய்ப்பு. அவர் நகைச்­சுவை உணர்வு மிக்­க­வர். வழக்­க­மாக எனது நண்­பர்­கள் குழு­வில் நான்­தான் ஏதா­வது நகைச்­சு­வை­களை சொல்லி சிரிக்க வைப்­பேன். ஆனால் இவ்­வி­ஷ­யத்­தில் மம்­முட்டி என்­னையே விஞ்­சி­விட்­டார்.

"அவர் நன்­றாக சமைப்­பார் எனக் கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன். இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்­பின்­போது மலபார் பிரி­யாணி செய்து பரி­மா­றி­னார். அவ்­வ­ளவு பெரிய நடி­கர், மிகுந்த அன்­பு­டன் படக்­கு­ழு­வி­ன­ருக்­குத் தாமே பிரி­யாணி பரி­மா­றி­ய­தைப் பார்த்து நெகிழ்ந்­தேன்," என்­கி­றார் ரம்யா.

, :

தமிழகத்  