‘இசை மேகம்’ வாணி ஜெயராம் மறைவு

பழம்­பெ­ரும் பின்­ன­ணிப் பாடகி வாணி ஜெய­ராம் நேற்று கால­மா­னார்.

திரை­யு­ல­கில் பல்­வேறு சாத­னை­களைப் புரிந்­துள்ள அவ­ருக்கு திரை­யு­ல­கத்­தி­னர் அஞ்­சலி செலுத்தி வரு­கின்­ற­னர். அவ­ருக்கு வயது 78.

தமிழ், தெலுங்கு, கன்­ன­டம் உள்­பட 19 மொழி­களில் பாடல்­க­ளைப் பாடி­யுள்­ளார் வாணி ஜெய­ராம்.

தனது அற்­பு­த­மான குரல் வளத்­தால் லட்­சக்­க­ணக்­கான ரசி­கர்­களை அவர் கொண்­டி­ருந்­தார்.

கடந்த 1971ஆம் ஆண்­டில் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான அவர், பத்­தா­யி­ரத்­துக்­கும் அதி­க­மான பாடல்­க­ளைப் பாடி­யுள்­ளார்.

‘குட்டி’ என்ற தலைப்­பில் உரு­வான இந்தி படத்­தில்­தான் அவ­ரது முதல் பாடல் இடம்­பெற்­றது. இதை­ய­டுத்து, மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் ‘தீர்க்க சுமங்­கலி’ படத்­தில் இடம்­பெற்ற ‘மல்­லிகை என் மன்­னன் மயங்­கும்’ எனத் தொடங்­கும் பாட­லால் தமிழ் ரசி­கர்­க­ளைத் தன் பக்­கம் திரும்­பிப் பார்க்க வைத்­தார்.

அதன் பின்­னர் தேன் குர­லுக்­குச் சொந்­தக்­கா­ர­ரான அவர், தனது இசை பவ­னி­யின்­போது எண்­ணற்ற பாடல்­க­ளால் ரசி­கர்­களை மகிழ்­வித்­தார்.

மூன்று முறை சிறந்த பின்­ன­ணிப் பாட­கிக்­கான இந்­திய தேசிய விரு­து­க­ளைப் பெற்­ற­வர், தமிழ்­நாடு, ஆந்­திரா, ஒடிசா, குஜ­ராத் மொழி­க­ளி­லும் சிறந்த பின்­ன­ணிப் பாட­கிக்­கான விரு­து­க­ளைப் பெற்­றுள்­ளார்.

கடந்த வாரம்­தான் இந்­திய அரசு, நாட்­டின் மிக உய­ரிய விரு­து­களில் ஒன்­றான பத்ம பூஷண் விருதை அவ­ருக்கு அறி­வித்­தது. 78 வய­தான வாணி ஜெய­ராம், சென்­னை­யில் வசித்து வந்­தார். இந்­நி­லை­யில், தமது இல்­லத்­தில் அவர் உயி­ரி­ழந்­த­தாக குடும்­பத்­தார் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, வாணி ஜெய­ராம் மர­ணத்­தில் மர்­மம் இருப்­ப­தா­க­வும் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

அவர் தமது வீட்­டில் தலை­யில் அடி­பட்ட நிலை­யில், ரத்த வெள்­ளத்­தில் இறந்து கிடந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து இயற்­கைக்கு மாறான மர­ணம் என வழக்­குப் பதிவு செய்து காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது. நேற்று காலை அவ­ரது வீட்­டில் பணி­பு­ரி­யும் பணிப்­பெண் நீண்ட நேரம் கத­வைத் தட்டியும் வாணி ஜெய­ராம் கத­வைத் திறக்­க­வில்லை எனத் தெரி­கிறது.

‘மேகமே மேகமே’ என்று பாடி பரவசப்படுத்திய வாணி ஜெயராமின் இசை மேகங்கள் என்றும் மறையாமல் இசை மழை பொழியும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!