ஹாலிவுட் பட பாணியில் உருவாகிறது விஜய்யின் ‘லியோ’

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் விஜய் நடிக்­கும் ‘லியோ’ திரைப்­ப­டம், ஹாலி­வுட் படப் பாணி­யில் உரு­வாக இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இப்­ப­டத்­தின் அறி­முக காணொளி நேற்று முன்­தி­னம் மாலை வெளி­யா­னது.

இதை­ய­டுத்து, விஜய் ரசி­கர்­கள் அதை உட­னுக்­கு­டன் பார்த்து ரசித்து உற்­சா­கம் அடைந்­த­னர்.

ஒரே நாளில் சுமார் 20 மில்­லி­யன் பேர் அந்­தக் காணொ­ளி­யைப் பார்த்­த­தாக படக்­கு­ழுத் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது. இது மிகப்­பெ­ரிய சாதனை என்­றும் விஜய் ரசி­கர்­கள் கூறி வரு­கின்­ற­னர்.

‘லியோ’ படத்­தில் சண்­டைக் காட்­சி­கள் அதி­கம் இருக்­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

‘மாஸ்­டர்’ படத்தை அடுத்து, சற்று வய­தான கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து வரு­கி­றார் விஜய். ‘லியோ’ படத்­தி­லும் அவர் அதே போன்­று­தான் தோன்­று­கி­றார் என்று தக­வல் கசிந்­துள்­ளது.

காஷ்­மீ­ரில் படப்­பி­டிப்பு தொடங்கி உள்ள நிலை­யில், மிகுந்த உற்­சா­கத்­து­டன் நடித்து வரு­கி­றா­ராம் விஜய். படப்­பி­டிப்­பில் அவர் உடன் நடிப்­ப­வர்­க­ளைத் தனது கைப்­பே­சி­யில் படம்­பி­டித்து அவர்­க­ளது நடிப்­பை­யும் பாராட்­டு­வ­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இதற்­கி­டையே, லோகேஷ் இயக்­கி­யி­ருந்த ‘கைதி, விக்­ரம்’ ஆகிய படங்­க­ளின் கதா­பாத்­தி­ரங்­கள் ‘லியோ’ படத்­தி­லும் இடம்­பெ­றுமா என்ற எதிர்­பார்ப்பு ரசி­கர்­கள் மத்­தி­யில் அதி­க­ரித்து வரு­கிறது.

இது குறித்து தற்­போது தக­வல் ஏதும் வெளி­யா­காது என்­றும் படம் வெளி­யா­வ­தற்கு முன்­பு­தான் விவ­ரம் அறி­விக்­கப்­படும் என்­றும் தெரி­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!